செவ்வாய், 27 ஜூன், 2017

கனிமொழி :கீழடி தொன்மையான நாகரிகம் என நிரூபிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு

Kalai Mathi சென்னை: கீழடி மிகவும் தொன்மையான நாகரிகம் என
நிரூபிக்கப்பட்டு விடும் என மத்திய அரசு அச்சப்படுவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழர்களின் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை மத்திய அரசு அழிக்கப் பார்க்கிறது என்றும் கனிமொழி கூறினார்.
சென்னையில் நடைபெற்ற தமிழர் உரிமை மாநாட்டில் திமுக எம்பியான கனிமொழி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தமிழர்களின் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை மத்திய அரசு மத்திய அரசு அழிக்கப்பார்க்கிறது என குற்றம்சாட்டினார். மேலும் கீழடியில் கிடைத்த பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்காதது தமிழக அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என்றும் கனிமொழி தெரிவித்தார். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு ஏன் முன்வரவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கீழடி மிகவும் தொன்மையான நாகரிகம் என நிரூபிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு உள்ளது என்றும் கனிமொழி கூறினார். கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமர்நாத்தை பணியிட மாற்றம் செய்யக் காரணம் என்ன? கனிமொழி கேள்வி எழுப்பினார். tamiloneindia.com

கருத்துகள் இல்லை: