வெள்ளி, 30 ஜூன், 2017

நன்றி பார்பனர்களே ! நாங்கள் தயாராவே இருக்கிறோம் !!!

Raja Rajendran: எஸ்.வி.சேகரின் லைவ் கேட்டேன். சாதி, மதம், தாய் - தந்தை
மாதிரி,  அதை ஒருபோதும் பழிக்காதீர். மாறாக தன் சாதிப் பெருமையை உரக்கப் போற்றுவீர். போலி மத எதிர்ப்பைச் செய்யாதீர், அதிலும் குறிப்பாக இந்து மதத்தை கீழ்மைப் படுத்தாதீர்கள், மோடியைத் திட்டாதீர்கள்...........
இதெல்லாம் அவர் கருத்துக்கள். அதைப் பிறகு பார்க்கலாம். தொடர்கிறார்.
99.9 மார்க் எடுத்தாலும் பிராமணர்களுக்குச் சீட் கிடைப்பதில்லை, நாங்கள் பாவப்பட்ட ஜென்மம், எங்கள் தாத்தாக்களுக்கு தாத்தாக்கள் செய்த
பாவத்துக்கு இன்னும் தண்டனையை அனுபவிக்கிறோம். எங்காவது அப்பா செய்த தப்புக்கு பையனைத் தண்டித்து பார்த்திருக்கிறீர்களா ?
3 விழுக்காடு பார்ப்பனர்கள் மீதி 97 விழுக்காடு மக்களை ஆட்டுவிக்கிறார்கள் என்று கூறும் மதிமாறன் இனி, நியூஸ் 7 சேனலுக்குள் காலடி வைக்க விட மாட்டேன் என அதன் முதலாளி, திரு.வைகுந்த ராஜன் என்னிடம் வாக்களித்தார். திருப்பதி நாராயணன்தான் தரக்குறைவாக நடந்துக் கொண்டார் என நடக்கவிருந்த கண்டனக் கூட்டத்தில் திமுக சார்பாக கலந்துக் கொள்ள இருந்தவரை, ஸ்டாலினிடம் சொல்லி, அவரை பின் வாங்க வைத்துவிட்டேன். சபாஷ். இங்க நாம் உள்ளே புகுவோம்.
ஒரு சின்ன ஆராய்ச்சியை மேற்கொள்வோம். பாவம் பார்ப்பனர்கள் என சேகர் கண்ணீர் வடிக்கும் அந்த 3% பார்ப்பனர்கள் நிலை இன்றைய தேதியில் எப்படி இருக்கிறது இந்திய ; தமிழக அளவில் ???

1.) நீதிபதிகள்
2.) ஐ ஏ எஸ் ; ஐ பி எஸ்
3.) ஊடகங்கள்
4.) நடிகர்கள்
5.) இயக்குனர்கள்
6.) அரசியல்வாதிகள்
7.) மத்திய அரசு அதிகாரிகள்
8.) பல்கலைக்கழக வேந்தர்கள்
9.) ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மாணவர்கள், இதன் பயனால் வெளி நாடுகளில் ஜோராக அன்னிய நாட்டுப் பிரஜைகளாகவே சொகுசாக வாழ்ந்து வருபவர்கள், இந்த வருடம் நீட் தேர்வில் தேறியவர்கள்
10.) 50 வருட கிரிக்கெட்டர்கள்  போர்ட் மெம்பர்ஸ்
மேற்கண்ட பத்து பாயிண்ட்களிலும் வெறும் 3% பார்ப்பனர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா என ஆராய்ந்தால் போதும். சேகர் கண்ணீரில் எந்தளவு உண்மை இருக்கிறது எனப் புரியவரும். இதில் கோவில் அர்ச்சகர்களைச் சேர்க்கவில்லை.
முழுக்க முழுக்க எல்லோருக்கும் பரவலாகப் போய்ச் சேர வேண்டிய பல வாய்ப்புகளை, தங்களின் வாழையடி வாழையாக அடுத்தவர்களை அனுமதிக்காமல் கிட்டிய அறிவாலும் ;
வாய்ப்புகள் கிட்டக் கூடிய இடங்களிலெல்லாம் முழுக்க இவர்களே ஆக்கிரமித்துக் கிடப்பதால், அவர்கள் ஆட்களுக்கு எளிதில் அந்த வாய்ப்புகளை பெற்றுத் தருவதாலும் ;
பெரியார் காலத்தில் என்றல்ல, இப்போதும் அதிகாரம் இருக்கும் இடங்களில் இவர்களே வீற்றிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் பாவம் என்று சேகர் கண்ணீர் வடிக்கிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் பார்ப்பனர்கள் மேல் எதுவும் கொலைப் பழி உள்ளதா என்றெல்லாம் ச்சும்மாக் கெடந்த சங்கை சேகர் எடுத்து ஊஊஊ என ஊதுகிறார்.
ஐயா, இந்தியாவின் மகா மனிதனை, விடுதலை வாங்கித் தந்த மகாத்மாவைச் சுட்டுக் கொன்றவன் நாதுராம் கோட்ஸே எனும் மராட்டிய பார்ப்பனன்தான்.
இனி, பிராமணர்களை எவரேனும் இழிவாகப் பேசினால் சட்டரீதியாக நடவடிக்கையை ஒன்றிணைந்து எடுப்போம் என்று சேகர் கூறுகிறார். இதை வரவேற்கிறேன். நெல்சன் எனும் பெயர் உங்களை உறுத்தத்தான் செய்யும். ஆனால் அந்த மனிதரும் அதைத்தான் அன்று நாராயணனிடம் சொல்லிய வண்ணம் இருந்தார். அவதூறு என்றால் அவர் மீது வழக்கு போடுங்கள் என்றார். மீண்டும் அதையேத்தான் நீங்களும் சொல்கிறீர்கள் சேகர். சட்டரீதியாக மட்டுமே செல்ல முடியும். அன்று நாராயணன், மதிமாறனுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தார். அவரும் சட்டரீதியாக அவர் மேல் நடவடிக்கை எடுக்கட்டும்.
பார்ப்பனர்களை விட, வைகுந்தராஜன் போன்ற பார்ப்பனீயர்களை அடையாளம் காணுவதுதான் இப்போது மிக முக்கியமான ஒன்று. காட்டிக் கொடுத்ததற்கு நன்றி சேகர்ஜி.
ஆளும் பொம்மைகள் எதுவானாலும் இருக்கட்டும் அவர்களை ஆட்டுவிக்கும் நூல் எப்போதும் எங்கள் கைகளில்தான் என பொம்மலாட்ட இயக்குனர்கள் இப்போதும் கெத்துக் காட்டுகிறார்கள்.
ஒன்றுபட்டு அவர்கள் நிற்பார்கள் என்றால், அவர்களால், சரி அவர்களின் பாட்டன்களின் பாட்டன்களால் யாவற்றையும் இழந்து, மிக மெதுவாக எழுந்து நிற்கும், ஏனைய மக்களால் ஒன்றுபட முடியாதா ?
இதற்குத்தான் ஆசைப்பட்டோம். சிறிது சிறிதாக முகமூடிகளை விலக்கிக் காட்டும் இவர்களின் உண்மை முகத்தை அறிய வேண்டும் என்றே ஆசைப்பட்டோம். அப்போதுதான் பிரிந்துக் கிடக்கும் பிற தமிழ்ச்சமூகம் ஒன்றுபடும் என ஆசைப்பட்டோம்.
கனவு நனவாகிக் கொண்டே வருகிறது. போன வருடம் ஒய்.ஜி.மகேந்திரன், இந்த வருடம் எஸ்.வி. சேகர். நடுவே ஏகப்பட்ட நாராயணன்கள், சுப்ரமண்யசாமிகள், ராகவன்கள், சர்மாக்கள், கோஸ்சாமிகளும் இதற்கு நீரூற்றி வருகிறார்கள்.
எல்லாம் நல்லதற்கே. எங்கள் நலத்திற்கே. நன்றி பிராமண வீரர்களே, போருக்கு நாங்கள் தயாராவே இருக்கிறோம் !!!

கருத்துகள் இல்லை: