பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் நடிகர் கமலுக்கு கோடி ஊதியமும்
அவருடைய விஸ்வரூவம் -2 படத்தையும், சபாஷ் நாயுடு என இன்னொரு படத்தையும்
கமல் நிர்ணயிக்கிற தொகைக்கு வாங்குவதாக பேசி முடிக்கப்பட்டு கமல்
இந்நிகழ்ச்சிக்குள் கொண்டு வரப்பட்டார்.
த்ரிஷா , ஸ்னேகா போன்ற பல நடிகைகளை வைத்தே விஜய் தொலைக்காட்சி முதலில் இந்நிகழ்ச்சியை நடத்த முயன்றது. ஆனால் அவர்கள் கேட்ட தொகை கட்டுப்படியாகாத காரணத்தால் மார்க்கெட் போன நடிகர் நடிகைகளை அழைத்து லம்பாக ஒரு தொகை பேசி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கொண்டு வந்தார்கள்.
நிகழ்ச்சி சுவராஸ்யத்திற்காக சினிமா அல்லாத பிரமுகர் வேண்டும் அவர் தமிழ், தமிழர் அரசியல் பேசுகிறவராக இருக்க வேண்டும் என்று இயக்குநர் கவுதமனை அழைத்து பெருந்தொகை பேசியது விஜய் டிவி நிர்வாகம் ,ஆனால் தான் கலந்து கொள்ள முடியாது என மறுத்திருக்கிறர் இயக்குநர் கவுதமன்.
கடைசி நேரத்தில்தான் மெரினா போராட்டத்தில் புகழ் பெற்ற ஜூலியானாவை அழைத்து தொகையை சொல்ல உடனே அவரும் சம்மதித்திருக்கிறார். 100 நாள் நிகழ்ச்சி இதில் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கின்றீர்களோ அதற்கு ஏற்ப தொகை உங்களுக்கு 25 லட்சம் கியாரண்டி என்று சொல்ல அவரும் உற்சாகமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சம்மதித்திருக்கிறார்.
பிக்பாஸ் டிரெஸ் கோட் உள்ளிட்ட அனைத்திற்கும் சம்மதித்த ஜூலி ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த தாதிப் பெண். மிகவும் ஏழை என்று சொல்ல முடியா விட்டாலும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பம்தான்.
தான் ஏமாற்றப்படுவதை அறியாதவரா ஜூலி?
இதையும் வாசிச்சிடுங்க #Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்
கார்ப்பரேட் ஒழுக்கமும் அது உருவாக்கும் வணிகத்தையும் புரிந்து கொள்வது கடினம்தான். அதுவும் இந்த தலைமுறை பெண்ணுக்கு கடினம்தான். ஆனால் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் சில மணி நேர கோஷம். பின்னர் அவரை கொன்று விட்டதாக பரவிய வதந்திக்கு மறுப்பு என அதன் மூலம் கிடைத்த பிரபல்யத்தை, அறியாமையால் விஜய் தொலைக்காட்சிக்கு விற்றுக் கொண்டார் என்று எடுத்து க்கொள்ள முடியாது.
அதே போராட்டத்தில் போராடிய மாணவர்களை காப்பற்ற வந்து தங்களின் சொந்த தொழிலில் கோடிக்கணக்கான ரூபாயையும் இழந்து தொழிலையும் இழந்து நிற்கிறார்கள் மீனவர்கள். அப்படி அவர்கள் இழக்க அறியாமைதான் காரணமா?
மொத்தமாக 1500 கோடி அளவுக்கு இந்நிகழ்ச்சியை வைத்து வசூலிக்க திட்டமிடும் விஜய் டிவி தன் தூண்டிலை பல திசைகளிலும் போட்டு வருகிறது. //tamilarasial.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக