மின்னம்பலம்; :எந்த
ஆண்டும் இல்லாத வகையில், 2017ஆம் வருடத்தின் துவக்கமே கடுமையான வறட்சி
நிலவும் ஆண்டாக இருந்தது. குடிநீர்ப் பிரச்னை தலைகாட்டியது, பயிர்களை
வளர்க்க விவசாயிகள் பலர் நீரில்லாமல், தவித்து வாங்கிய கடனைக்கட்டமுடியாமல்
இறந்தனர். மேலும் இந்தாண்டு பொதுமக்கள் பலர் காலிக்குடங்களுடன் நீருக்காக
அலையும் சூழல் ஏற்பட்டது.
முக்கியமாக தென் மாவட்டத்தின் நீர் ஆதாரமான வைகை நதி வறண்டது. இதனால் பாசன வசதிபெறும் ஐந்து மாவட்ட மக்கள் கவலையில் இருந்தனர். அவர்களுக்கெல்லாம் நற்செய்தியாக தற்போது, தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கனமழை பெய்யத்தொடங்கியிருக்கிறது.
இதனால் வைகையின் நீர் ஆதாரமான, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 561 அடியிலிருந்து 741 அடியாக உயர்ந்திருக்கிறது. மேலும் விவசாயம் மற்றும் குடிநீருக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 200 கன அடி நீரிலிருந்து, 300 கன அடி நீராக அதிகரித்துள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களும் விவசாயிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய நீர்நிலை ஆய்வாளார்கள், ' கனமழை காரணமாகவே, நீர் அதிகமாக திறக்கப்பட்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் நீர் வரத்து குறையும் பட்சத்தில், மக்களுக்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கப்படும்' என்றார்கள். இந்நிலையில் தற்போது முல்லைப்பெரியாறு அணையில் நீர் இருப்பு 802 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 109.3 அடியாகவும் இருந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக