புதன், 28 ஜூன், 2017

சாதி அடிப்படையில் விவாதம் ஏன்? குடியரசு தலைவர் வேட்பாளர் மீராகுமார்.. சாதிப் பெயர்களை கைவிட ...


ஜனாதிபதி தேர்தலில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார், ''ஜனாதிபதி வேட்பாளரை, அவரது தகுதி அடிப்படையில் பார்க்காமல், சமூகம் அடிப்படையில் விவாதிப்பது கவலை அளிக்கிறது,'' என, தெரிவித்துள்ளார்.>ஜனாதிபதி தேர்தல், ஜூலை 17ல் நடக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், பீஹார் முன்னாள் கவர்னரும், தலித் சமூகத்தை சேர்ந்தவருமான, ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார்.
இதையடுத்து, பீஹாரை சேர்ந்த மற்றொரு தலித் தலைவரும், லோக்சபா முன்னாள் சபாநாயகருமான மீரா குமாரை, ஐ.மு., கூட்டணி சார்பில், காங்., களமிறக்கியது. ;இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த மீரா குமார் கூறியதாவது: இந்தியவரலாற்றில் பல முறை, உயர் சமூகத்தை சேர்ந்த இருவர், ஜனாதிபதிதேர்தலில் போட்டியிட்டுள்ளனர். அப்போதெல்லாம், ஜாதி அடிப்படையில், விவாதங்கள் நடக்கவில்லை. இந்த முறை, இரண்டு தலித் தலைவர்கள், ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


தற்போது, நாடு முழுவதும், ஜனாதிபதி வேட்பாளர்களை ஜாதி அடிப்படையில் விவாதிக்கும் மோசமான போக்கு காணப்படுகிறது. ஜாதியை ஒழித்துக் கட்ட வேண்டும்; இந்த பூமியின் மிக ஆழமான பகுதியில், ஜாதியை புதைத்து, அதை முழுமையாக மறக்க வேண்டும்.

ஜனநாயக பண்புகள், சமூக நீதி, வெளிப்படைத்தன்மை, பேச்சு சுதந்திரம், உள்ளார்ந்த தன்மை, ஜாதி முறை அழிப்பு, வறுமை ஒழிப்புபோன்ற விஷயங்கள் தான், என் இதயத்திற்கு அருகில் உள்ள கொள்கைகளாக உள்ளன. தலித்கள் மீது, சமீப காலமாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள், அவமானமாக உள்ளன.

தக்க நேரத்தில் முடிவு

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை, குஜராத்தில், ஆமதாபாத் நகரில், சபர்மதி ஆசிரமத்தில்< இருந்து துவக்க திட்டமிட்டுள்ளேன். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்று, அரசியல் கட்சியினரிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளேன்.
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாருக்கு வேண்டுகோள் விடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை சந்தித்து பேசுவது குறித்து தக்க நேரத்தில் முடிவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: