செவ்வாய், 27 ஜூன், 2017

2012 முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கில வழியில் படிக்கின்றனர்? உயர் நீதிமன்றம் கேள்வி!

தஞ்சையில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.
அரசுப் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது?
அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்?
பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கக் காரணம் என்ன?
அரசுப் பள்ளி ஆசியர்கள் சங்கம் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது?
ஆங்கிலவழிக் கல்வி எனில் தமிழ்ப்பாடம் நடத்துபவர்களே ஆங்கிலத்திலும் பாடம் எடுப்பார்களா?
2012 முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கின்றனர்?
2012 அரசாணைப்படி எத்தனைப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது?

உரிய நேரத்துக்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
அரசு பள்ளி ஆசிரியர்கள் வருகையை சிசிடிவி காமராக்கள் மூலம் கண்காணிக்காதது ஏன்?
கிராமப்பகுதி, மலைப்பகுதி பள்ளி ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசியர்கள் தங்கள் கடமைகளைச் செய்யாவிடில் கிராமப்புற மாணவர்களை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறிய நீதிபதி கிருபாகரன் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் என உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் tamilthehindu

கருத்துகள் இல்லை: