திருச்சியில் கருமண்டபம் குழந்தை ஏசு ஆலயத்திற்கு சொந்தமான முன்புறம்
உள்ள சுமார் 5000 சதுர அடி உள்ள இடத்தை திருச்சி மறைமாவட்ட பிஷப் ஆண்டோனி டிவோட்டா மற்றும் பிற மறை மாவட்ட 5 பிஷப்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி திருமண மண்டபம் கட்ட முயற்சி செய்து ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்றதை எதிர்த்து திருச்சி மறைமாவட்ட பங்கு மக்கள் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து, ஆரம்ப கட்ட வேலையை நிறுத்தி மாதா சுருபத்தை அந்த இடத்தில் நிறுவி போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று இரவு 9.00 மணிக்கு ஆயர் அலுவலகத்திற்கு கருமண்டபத்தை சேர்ந்த பங்கு மக்கள் அனைவரும் கையில் மெழுகு வர்த்தியுடன் திருச்சி மேலப்புதூரில் உள்ள பிஷப் வீட்டிற்கு யாரும் தெரியாமல் 50 பேருக்கு மேல் உள்ளே புகுந்துள்ளனர்.
வெளியே நின்று ரொம்ப நேரம் பிஷப் பேச்சு வார்த்தைக்கு வெளியே வராதால் ஆத்திரம் அடைந்த மக்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் பிஷப் வீட்டிற்குள் உள்ளே செல்ல ஆரம்பித்தனர். பங்கு மக்களின் ஆத்திரத்திற்கு ஆளான பிஷப், உயிருக்கு பயந்து தப்பி பிழைத்தால் போதும் என்று ஆயர் இல்லத்தில் ஓடி ஓளிந்துள்ளார். இதனால் திருச்சி ஆயர் இல்லமே பதட்டமடைந்துள்ளது. - ஜெ.டி.ஆர். நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக