வெள்ளி, 30 ஜூன், 2017

Don Ashok: மூளை வளர காயத்திரி .. அந்த பலான உறுப்பு' கிடுகிடுவென வளர என்ன மந்திரம்

அன்புள்ள டான்,
எஸ்.வீ.சேகர் சார் சுபவீக்கு எழுதிய கடிதம் கண்டேன். அதில் வரும் மருத்துவ தகவல் ஒன்று என்னை மலைக்க வைத்தது. காயத்ரி மந்திரம் சொன்னால் மூளை வளரும் என சொல்லியிருந்தார். எனக்கும் ஒரு 'பலான' உறுப்பு வளர வேண்டும். நீங்கள் அவருடன் பல டிவி விவாதங்களில் பங்கேற்றவர். நான் நிறைய போலி மருத்துவர்கள், ஆன்லைன் ஆசாமிகள், ஹீலர்களிடம் காசு கொடுத்து ஏமாந்தும் ஒரு மி.மீ கூட அதிகம் வளரவில்லை. கொஞ்சம் தயவுகூர்ந்து எந்த மந்திரம் சொன்னால் 'அந்த பலான உறுப்பு' கிடுகிடுவென வளரும் என கேட்டு சொல்வீர்களா? அவருக்கு ஃபீஸ் அனுப்பிவிடுகிறேன் என்றும் மறக்காமல் சொல்லிவிடுங்கள்.
-ஆவலுடன் காத்திருக்கும் பெயர் வெளியிட விரும்பாத அபலை.
அன்புள்ள பெ.வெ.அ.
உங்கள் பிரச்சினை புரிகிறது. இந்திய ஆண்களில் பலருக்கு சிந்தனை செய்யும் மூளையே அந்த பலான உறுப்புதான் எனும்போது உங்களுக்கு அதிலேயே சிக்கல் என்கிறீர்கள். என் அனுதாபங்கள். எஸ்.வி.சேகரின் கடிதம் நானும் படித்தேன். ஆனால் அதை ஆழ்ந்து படித்தால் அதில் முரணான தகவல்கள் உள்ளதை அறியலாம். பொதுவாக காயத்ரி மந்திரம் என்பது அவர் சார்ந்த சாதியினர் மட்டுமே படிப்பது. அதனால்தான் மற்றவர்கள் படிக்க கூடாது என்பதற்காக 'அனைத்து சாதியினரும் அர்ச்சகர்' ஆகும் சட்டத்திற்கு தடை வாங்கினார்கள்.
எனவே நீங்கள் கோரும் மந்திரத்தை உங்களுக்கு அவர் சொல்லுவாரா மாட்டாரா என்பது நீங்கள் என்ன சாதி என்பதை பொறுத்தே இருக்கிறது. ஏனெனில் அவர் சாதியை தாயாகவும், கோத்திரத்தை சித்தியாகவும் பாவிப்பவர். மேலும் அந்தக் கடிதத்தை படித்தபோது எஸ்.வீ.சேகரையே அவர் வீட்டில் காயத்ரி மந்திரம் படிக்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்திருக்கும். ஏனென்றால் அவர் சொன்னதைப் போல அதைப் படித்து மூளை வளர்ந்திருந்தால் அப்படி ஒரு கடிதத்தை அவர் எழுதியிருக்க மாட்டார் அல்லவா? இதையெல்லாம் நீங்கள் சிந்துத்துப் பார்க்க வேண்டும்.
எனினும் உங்கள் ஆசைக்காக ஒருமுறை அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன். அதுவரை மனம் தளராதீர்கள். இருப்பதை வைத்து சமாளியுங்கள். எங்கள் ஊர் புடலங்காய் தோட்டத்தில் புடலங்காய் நீளமாக வளர அதன் தொங்கும் முனையில் கல் கட்டுவார்கள். அப்படி ஏதாவது இயற்கை விவசாய முறையை முயற்சித்துப் பாருங்கள். யார் கண்டார் நாளை நீங்கள் வேளாண் விஞ்ஞானியாக கூட ஆகலாம். ஏனென்றால் காலம் அப்படி கெட்டுக் கிடக்கிறது. 6 இன்ச் லட்சியம். 3 இன்ச் நிச்சயம்!
அக்கறை மற்றும் அனுதாபத்துடன்,
-டான் அசோக்
(குறிப்பு: சுண்டுவிரல் என்பதைச் சொல்ல கூச்சப்பட்டுதான் வாசகர் பலான உறுப்பு என எழுதியிருக்கிறார். ஆபாசமாக எண்ணிவிடாதீர்கள். நம் முன்னோர்கள் ஒன்று முட்டாள்கள் இல்லை.)

கருத்துகள் இல்லை: