வெள்ளி, 30 ஜூன், 2017

நீட் தேர்வு .. வெளிநாடுகளை குறி வைக்கும் பெற்றோர்கள்

siva: tamiloneindia.com:  சென்னை: நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால், தங்களுக்கு தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைக்காது என்று மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக, நம் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும், இந்த ஆண்டு இவ்வாறு இடம் தேடும் மாணவர்களின் எண்ணிக்கை 65% உயர்ந்துள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயில்வது எளிதானதா? கட்ட வேண்டிய கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை எவ்வளவு? எந்த நாட்டு மருத்துவக் கல்வி தரமானது மற்றும் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்ற கேள்விகளோடு, இந்தக் கல்விப் பிரிவில் கடந்த 14 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் திரு முகமது கனி அவர்களை அணுகினோம்.





வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். கற்றுக் கொள்வதில் எதிர்கொள்ளக் கூடிய அனைத்து தகவல்களையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். இதோ நம் கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்.
கேள்வி: நம் மாணவர்கள் படிக்கும் வகையில் எத்தனை நாடுகள் மருத்துவக் கல்வியை அளிக்கின்றன? அவற்றில் எவை நமக்கு ஏற்றவையாக அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் நாடும் நாடுகளாக நீங்கள் எண்ணுகிறீர்கள்?
பதில்: ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், நேபாளம், வங்க தேசம் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளுக்கு நம் மாணவர்கள் செல்கிறார்கள். அதிகம் செல்வது, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் ரஷ்யாஆகியவற்றுக்குத் தான். இந்த மூன்றிலும் நம் மாணவர்கள் அதிகம் நாடுவது பிலிப்பைன்ஸ் தான்.




ஏனென்றால், சீனா மற்றும் ரஷ்யாவில் மருத்துவம் பயில வேண்டும் என்றால் கட்டயமாக அந்த நாட்டு மொழியை கற்க வேண்டும். மேலும், இங்குள்ள சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறானதாகவும், நம் மாணவர்கள் தாங்கக் கூடியதாகவும் இல்லை. கட்டணமும் சற்று அதிகம். ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆங்கிலமே வழக்கு மொழியாகவும், படிப்பு மொழியாகவும் உள்ளது.
சீதோஷ்ண நிலை இந்தியாவைப் போன்றே உள்ளது. சுத்தமான காற்று மற்றும் நீர் கொண்ட நாடுகளில் உலக அளவில் மூன்றாவது இடம் கொண்ட நாடு. மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள நோய்களின் தன்மை, இந்தியாவில் காணப்படும் நோய்களின் தன்மையை 93% ஒத்திருப்பதாக, WHO தன் ஆய்வில் தெரிவித்துள்ளது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் தான், பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் படித்து இந்தியா திரும்பும் மாணவர்கள், மற்ற நாடுகளில் படித்துத் திரும்புபவர்களைக் காட்டிலும் சிறந்த வெற்றி பெற்ற மருத்துவர்களாகச் செயல்படுகின்றனர்.
கேள்வி: மொழி, கடுங்குளிர் தவிர கல்வி முறையில் ஏதேனும் குறைபாடு சீனா மற்றும் ரஷ்யா நாடுகளில் உண்டா?
பதில்: நல்ல கேள்வி. எம்.பி.பி.எஸ். படிப்பில் மொத்தம் 19 பாடப் பிரிவுகள் உள்ளன. அவை அனாடமி, பிசியாலஜி, பார்மகாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, ஆப்தால்மாலஜி, அன்ஸ்தீசியா, ஆர்த்தோபீடிக்ஸ், ரேடியாலஜி, ஜெனரல் சர்ஜரி, ஆப்ஸ்டெட்ரிக்ஸ், கைனகாலஜி, டெர்மடாலஜி, பாதாலஜி, இஎன்டி, ஃபாரன்சிக் மெடிசின், ப்ரிவென்டிவ் மற்றும் சோஷியல் மெடிசின், கம்யூனிட்டி மெடிசின் மற்றும் சைக்யாட்ரி. ஆனால், பெரும்பாலும், ரஷ்ய மற்றும் சீன மருத்துவக் கல்லூரிகளில், அனைத்து 19 பாடங்களும் நடத்தப்படுவதில்லை.
இஎன்டி, ஆப்தால்மாலஜி, ப்ரிவென்டிவ் மற்றும் சோஷியல் மெடிசின், ஆர்த்தோபீடிக்ஸ் ஆகிய பாடங்களுக்கு சிடிக்களில் விடியோ பாடங்கள் மட்டுமே தரப்படுகின்றன. இவற்றை "OPTIONAL" என்ற வகையில் படிக்காமல் இருக்க வழி தருகின்றனர்.
இதனால் தான், இங்கு பயிலும் மாணவர்களில் பலர், இந்தியா திரும்பி வந்தவுடன் இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்தும் தேர்வுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்ச்சி பெறுகின்றனர். அதுவும் அந்த தேர்வில் பலமுறை முயற்சி செய்த பின்னரே பாஸ் செய்கின்றனர்.
ரஷ்யா மற்றும் சீன நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் முக்கிய வழக்கம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள நம் மாணவர்களும், பெற்றோர்களும் மறந்து விடுகின்றனர். அல்லது அவர்கள் கவனத்திற்கு வருவதில்லை. இந்த நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கச் சென்றவுடன், சீன அல்லது ரஷ்ய மொழியை ஓராண்டு கற்று, அதில் 60% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும்.
அவ்வாறு தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர்கள் மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்த்து கற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். வெறும் நூல்களில் படித்ததை மட்டும் கற்றுக் கொண்டு, மருத்துவ பட்டம் பெற்று திரும்புவார்கள். அதனால் தான், அவர்கள் நல்ல மருத்துவர்களாக இடம் பெற முடிவதில்லை. மேலும், மெடிக்கல் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற பல ஆண்டுகளை எடுத்துக் கொள்கின்றனர்.
நோயாளிகளையே பார்க்காமல், மருத்துவ பட்டம் பெறுவது என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இங்குள்ளவர்கள் உணர வேண்டும்.
கேள்வி: நீங்கள் கூறுவது எப்படி உண்மை என்று நம்புவது? அதெப்படி பாடங்களை நடத்தாமல் விடுவார்கள்?
பதில்: எங்களின் லிம்ரா நிறுவனம் நடத்தும் எம்.சி.ஐ. ஸ்கிரீனிங்ஸ் டெஸ்ட்டுக்கான பயிற்சி வகுப்புகளில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளில் படித்த டாக்டர்கள் உள்ளனர். அவர்கள் கூறிய தகவல் தான் இது. நீங்களே நேரில் எங்கள் பயிற்சி மையத்தில் அவர்களைச் சந்தித்து தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி: பிலிப்பைன்ஸ் நாட்டில் படிப்பதைப் பரிந்துரைக்க வேறு காரணங்கள் உள்ளனவா?
பதில்: நிறைய உள்ளன. அங்கு இந்திய சீதோஷ்ண நிலையே உள்ளதால், அங்குள்ள மக்களின் நோய் தன்மையும், இந்திய மக்களின் நோய் தன்மையும் 93% ஒத்துப் போகின்றன. இதனால், அங்குள்ள நோயாளிகளிடம் பயிற்சி பெற்ற நம் மாணவர்கள், இந்தியாவில் பிராக்டிஸ் செய்திடுகையில் எந்த வேறுபாட்டினையும் சந்திப்பதில்லை.




பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து 19 பாடங்களும் நவீன சாதனங்களின் உதவி கொண்டு முழுமையாக நடத்தப்படுகின்றன. இங்கு அமெரிக்க மருத்துவக் கல்வி முறை பின்பற்றப்படுவதால், இதில் படிப்பவர்கள் உலகெங்கும் பிராக்டிஸ் செய்திடலாம். வெளிநாட்டு மாணவர்களுக்கு இங்கு பாதுகாப்பான சூழ்நிலை நிலவுகிறது.
கேள்வி: உங்கள் லிம்ரா நிறுவனம் எந்தக் கல்லூரிகளைப் பரிந்துரைக்கிறது? அதற்கான தனிக் காரணங்கள் என்ன?
பதில்: பிலிப்பைன்ஸ் நாட்டில், தவோ நகரில் உள்ள தவோ மருத்துவப் பல்கலைக் கழகம் மற்றும் டாகுபான் நகரில் உள்ள லைசியம் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தென் இந்தியப் பிரதிநிதியாக லிம்ரா இயங்குகிறது.
லைசியம் நார்த் வெஸ்டர்ன் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் ஒரு அரசாங்க மருத்துவமனையும், தனியார் பிரிவில் இயங்கும் ஒரு மருத்துவ மனையும், மாணவர்கள் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளன.
தவோ மருத்துவப் பல்கலைக்கழகத்துடன், நான்கு தனியார் மருத்துவமனைகளும், இரண்டு அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவில் எந்த மருத்துவக் கல்லூரியிலும் பயன்படுத்தப்படாத, அதி நவீன "ANATOMAGE TABLE மற்றும் SIMULATION LAB" என்னும் டிஜிட்டல் சாதனங்கள் இக்கல்லூரிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவக் கல்வியைக் கற்றுத் தருவதில், இவை இரண்டும் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி, கற்றலை எளிமைப்படுத்தி, கற்றுக் கொள்வதை எளிதாக்குகின்றன.
தவோ மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் மொத்த டாக்டர் படிப்பையும் முடிக்க, கல்விக் கட்டணம், நூல்கள் வாங்குதல், விடுதி மற்றும் உணவு, இந்தியாவிற்கான பயணங்கள் மற்றும் பிற தனிச் செலவுகள் உட்பட அனைத்திற்கும் ரூ.30 லட்சம் முதல் ரூ.33 லட்சம் வரை ஆகலாம். லைசியம் நார்த் வெஸ்டர்ன் பல்கலையில், ஒருவருக்கு மொத்த செலவு ரூ. 28 லட்சத்திற்குள் இருக்கும்.
கேள்வி: இவ்வளவு பணத்தை எப்படி மொத்தமாக ஒருவர் செலுத்த முடியும்?
பதில்: இல்லவே இல்லை. ஐந்து ஆண்டுகளிலும், ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் தான் கட்டணம் செலுத்த வேண்டும். அதனையும் தவணை முறையில் செலுத்த லிம்ரா சலுகை பெற்றுத் தருகிறது. வங்கிக் கடன் பெறுவதற்கான ஆவணங்களைப் பெற்றுத் தந்து, கடன் பெற்றிட வழி காட்டுகிறது.
கேள்வி: இந்தக் கல்லூரிகளில் பெண்கள் பாதுகாப்பாகத் தங்கிப் படிக்க முடியுமா?
பதில்: இரண்டு கல்லூரிகளிலும் பெண்களுக்கு மட்டும் எனத் தனி விடுதி உண்டு. அனைத்து விடுதிகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. கல்லூரி டீன் வீடு அந்த வளாகத்திலேயே உள்ளது. தென் இந்திய மாணவர்கள் அதிகம் படிப்பதால், நம் உணவு வகைகள் விடுதியில் தயாரித்து அளிக்கப்படுகின்றன. விடுதி, நூலகம் ஆகியவை குளிரூட்டப்பட்டு, மாணவர்கள் அமைதியாகப் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
கேள்வி: இந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நீட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்?
பதில்: இதற்கு நீட் தேர்வு எழுத தேவையில்லை மாணவர்கள் +2 பாடத்தில், உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
கேள்வி: இந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு ஏன் லிம்ரா நிறுவனத்தை அணுக வேண்டும்? நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கக் கூடாதா?
பதில்: நல்ல கேள்வி. பல ஆண்டுகளாக நாங்கள் இந்தப் பல்கலைக்கழகங்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறோம். பிலிப்பைன்ஸ் நாட்டின் துதராலயங்களுடன் இணக்கமான உறவு வைத்துள்ளோம். இதனால், அட்மிஷன் பெறுவது, விசா மற்றும் விசா நீட்டிப்பு பெறுவது, பயண ஏற்பாடுகளைச் செய்வது, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று பதிவு செய்வது, தென்னிந்திய உணவு கிடைக்கும்
விடுதிகளில் நல்ல அறைகள் பெற்றுத் தருவது, படிக்கும்போது ஏற்படும் தேவைகளை நிறைவேற்றுவது போன்றவற்றை எளிதாக மேற்கொண்டு மாணவர்களுக்கு இன்னொரு அன்பான பெற்றோர் போல லிம்ரா செயல்படுகிறது.
கேள்வி: வேறு என்ன சேவைகளை லிம்ரா வழங்குகிறது?
பதில்: மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கூடுதல் சேவைகள் வழங்கிட லிம்ரா தனது கிளை அலுவலகத்தை பிலிப்பைன்ஸ் தவோ நகரில் துவக்கியுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் பெற்றோர்கள் தவோ சென்றால் அவர்களுக்கு தேவையான உதவிகளை எங்கள் அலுவலர்கள் செய்து தருவார்கள்.
வேறு எந்த இந்திய கல்வி நிறுவனத்திற்கும் பிலிப்பைன்ஸ் நாட்டில் கிளைகள் இல்லை. இவற்றைக் காட்டிலும் மிக முக்கிய சேவை ஒன்றை லிம்ரா தன் மாணவர்களுக்கு வழங்குகிறது. டாக்டர் பட்டப் படிப்பினைப் படித்து முடித்து வரும் மாணவர்கள், இந்தியாவில் பிராக்டிஸ் செய்திட, மெடிக்கல்
கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் ஐந்தாண்டு படிப்பில் மாணவர்கள் கற்ற அனைத்திலும் கேள்விகள் இருக்கும்.
மாணவர்கள் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தத் தேர்வினை எழுதுவதால், பாடங்களை நினைவில் வைத்து பதில் எழுதச் சிரமப்படுகின்றனர். எனவே, இந்தச் சிரமத்தைப் போக்க, மாணவர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டு படிக்கையில், தவோவில் உள்ள லிம்ரா பயிற்சி மையத்தில், லிம்ரா பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. பின்னர், மாணவர்கள் இந்தியா திரும்பிய பின்னர், சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி நகரங்களில் இந்த பயிற்சியைத் தொடர்ந்து ஐந்தரை மாதங்களுக்கு நடத்துகிறது.




இதனால், மாணவர்கள் தங்கள் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று, இந்தியாவில் பிராக்டிஸ் செய்திடும் உரிமையைப் பெறுகின்றனர். சென்ற டிசம்பரில் நடந்த எம்.சி.ஐ. ஸ்கிரீனிங் தேர்வில், லிம்ரா மையத்தில் கோச்சிங் கிளாஸ் படித்த டாக்டர் செராபிம் என்கிற மாணவி, முதல் முயற்சியிலேயே 198 / 300 மதிப்பெண் பெற்று, இந்தியாவிலேயேஐந்தாவது இடத்தைப் பெற்று தேர்ச்சி பெற்றார். இந்த தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவி 205 மதிப்பெண் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தக் கல்வி ஆண்டில் லிம்ரா மூலம் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு ரூ.75,000 மதிப்புள்ள இந்த பயிற்சி வகுப்புகள், லிம்ராவின் அன்புப் பரிசாகக் கட்டணம் எதுவுமின்றி வழங்கப்பட உள்ளன.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விரும்பினால், மல்ட்டி ஸ்பெஷல் மருத்துவமனைகளில், உள்ளுறை மருத்துவர்களாக (INTERNSHIP) பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை லிம்ரா பெற்றுத் தருகிறது. தொடர்ந்து, இவர்கள் எம்.எஸ். மற்றும் எம்.டி. உயர் வகுப்புகளில் சேர்க்கை அனுமதி பெற, மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா (எம்.சி.ஐ.) நடத்தும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியையும் லிம்ரா அளிக்கிறது.
இந்த வகையில், எம்.பி.பி.எஸ். தொடக்கம் முதல், எம்.டி./ எம்.எஸ். வகுப்புகளுக்கான சேர்க்கை வரை, லிம்ரா நம் மாணவர்கள் பக்கம் துணை நிற்கிறது. மாணவர் சேர்க்கை முதல், திறமையான டாக்டராக உருவாகும் வரை ஒருவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் கல்வி வழி காட்டும் நிறுவனமாக லிம்ரா நிறுவனம் இயங்கி வருவதை திரு. முகமது கனி அவர்களின் பதில்கள் உறுதிப்படுத்தின. அவர் கொடுத்த தகவல்களுக்கு நன்றி கூறி விடை பெற்றோம்.
உங்களுக்கு மேலதிகத் தகவல்கள் தேவை இருப்பின், லிம்ரா நிறுவனத்தை கீழ்க்காணும் முகவரியில் அணுகலாம்.
லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டண்ட்ஸ், 177, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, எஸ்.எம்.எஸ். சென்டர், முதல் மாடி, மைலாப்பூர், சென்னை 600004. தொலைபேசி 9445483333 / 9445 783333 / 9952922333

கருத்துகள் இல்லை: