
.எடப்பாடி பழனிச்சாமி. ஒருகட்டத்தில், நீங்கள் என் பக்கம் வந்துவிட்டால், அரைமணி நேரத்தில் பன்னீர்செல்வம் இங்கு வந்துவிடுவார்' ஏறத்தாழ 34 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்துப் பேசினர். இந்த எம்.எல்.ஏக்களிடம் எடப்பாடியும் ஆலோசனை நடத்தினார். எம்.எல்.ஏக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம். சசிகலா குடும்பத்தை பொருட்படுத்த வேண்டாம் என அமைச்சர்களுக்கு ஆலோசனை கூறினார் எடப்பாடி. ஜனாதிபதி தேர்தலையொட்டி, அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் முடிவை எடுக்க, தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏக்களும் ஒதுங்கிச் சென்றனர். அதிருப்தி எம்.எல்.ஏக்களைக் கையில் வைத்துக் கொண்டு, எடப்பாடியை வீட்டுக்கு வர வழைக்க நினைத்தார் தினகரன். ஆனால் ஆட்சியே போனாலும் பரவாயில்லைஎனத் தூது அனுப்பி பார்த்தாராம் தினகரன். அதற்கும் எடப்பாடி பதில் சொல்லவில்லை. எடப்பாடியின் உறுதியால்தான், இந்த நிமிடம் வரையில் கட்சி அலுவலகத்துக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார் தினகரன். தற்போது தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏக்களில் பலர் எடப்பாடியின் பக்கம் வந்துவிட்டனர். ஓரிரு நாட்களுக்கு முன்பு முதல்வரை சந்தித்த எம்.எல்.ஏக்கள், ஒருநாளாவது அமைச்சர் பதவியில் அமர வேண்டும் என எங்களுக்கும் ஆசை இருக்காதா? நீங்கள் மனது வைத்தால்தான், மந்திரி பதவி கிடைக்கும்' என நெளிந்துகொண்டே கூற, அவர்களிடம் பேசிய பழனிச்சாமி, உங்களுக்குப் பதவியை எப்போது தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நேரம் வரும்போது நான் தருவேன். எந்த மிரட்டல் மூலமாகவும் என்னைப் பணிய வைக்க முடியாது. அமைச்சரவையில் இருந்து யாரையும் நீக்கவும் மாட்டேன்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதனால், அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த எம்.எல்.ஏக்களுக்கு கூடுதல் அதிர்ச்சி என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
. tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக