கூவத்தூரில் 2 நாட்கள் சசிகலா இல்லையென்றால் இந்த ஆட்சியே இல்லை
என டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 1988, முதல் டிடிவி தினகரன் அம்மாவுடன் இருக்கிறார். 33 வருடமாக சசிகலாவுடன் இருந்துள்ளார். தற்போது பொதுச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் போது இவர்கள் எல்லோரும் தான் தேர்ந்தெடுத்தார்கள். அரி போன்றவர்களுக்கு அன்று தெரியாதது எல்லாம் இப்பொழுது தெரிவதற்கான காரணம் தெரியவில்லை. அரி உத்தமசீலன் போல் பேசக் கூடாது. அவருக்கு திடீரென எப்படி ஞானதோயம் வந்தது? கூவத்தூரில் 2 நாட்கள் சசிகலா இல்லையென்றால் இந்த ஆட்சியே இல்லை. கட்சியும் நடுரோட்டுக்கு சென்று இருக்கும். யாராக இருந்தாலும் நன்றி மறப்பது தவறு. ஆட்சிக்கு தலைவர் எடப்பாடி, கட்சிக்கு
பொதுச்செயலாளர் சசிகலா என்ற சூழ்நிலையில் எடப்பாடி இதற்கு மேல் நரசிம்மராவ் போல் மெளனம் காக்க கூடாது. இது போன்ற விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரி போன்று தான் தோன்றித்தனமாக பேசுபவர்களை தடுக்க வேண்டும். அரி போன்று தவறு செய்பவர்களை எப்படி கிள்ளி எறிய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நக்கீரன்
என டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 1988, முதல் டிடிவி தினகரன் அம்மாவுடன் இருக்கிறார். 33 வருடமாக சசிகலாவுடன் இருந்துள்ளார். தற்போது பொதுச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் போது இவர்கள் எல்லோரும் தான் தேர்ந்தெடுத்தார்கள். அரி போன்றவர்களுக்கு அன்று தெரியாதது எல்லாம் இப்பொழுது தெரிவதற்கான காரணம் தெரியவில்லை. அரி உத்தமசீலன் போல் பேசக் கூடாது. அவருக்கு திடீரென எப்படி ஞானதோயம் வந்தது? கூவத்தூரில் 2 நாட்கள் சசிகலா இல்லையென்றால் இந்த ஆட்சியே இல்லை. கட்சியும் நடுரோட்டுக்கு சென்று இருக்கும். யாராக இருந்தாலும் நன்றி மறப்பது தவறு. ஆட்சிக்கு தலைவர் எடப்பாடி, கட்சிக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக