புதன், 28 ஜூன், 2017

மணப்பாறை மாடும் விவசாயியும் .. அடாவடி செய்த பூஜ்ய சுவாமி சிரி செண்டலங்கார ஜீயர்,
Specialcorrespo: மணப்பாறை மாட்டுச் சந்தையில் மாடுகள் வாங்கிய, சில
விவசாயிகள் அவற்றை லாரியில் ஏற்றிக்கொண்டு, பொள்ளாச்சி அருகேயுள்ள தேவன்புதூருக்குச் சென்று கொண்டிருந்தனர். பழநி அருகே லாரி சென்று கொண்டிருக்கும்போது, அந்த வழியாக வந்த பூஜ்ய சுவாமி சிரி செண்டலங்கார ஜீயர், லாரியில் ஐந்து கன்றுகள், இரண்டு மாடுகள் இருப்பதைப் பார்த்து லாரியை மடக்கி பழநி தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆனால் போலீஸார், புகார் எழுதிக்கொடுத்திட்டுப் போங்க’ எனச் சொன்ன தகவல் கேள்விப்பட்டு, விவசாயிகள் மேல நடவடிக்கை எடுக்காத காவல்துறையை திட்டி ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் காவல்நிலையம் முன்பாகக் கூடி கோஷம் எழுப்பவே ..

மாடுகளை ஏற்றி வந்த விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்களும் காவல் நிலையம் முன்பாகக் கூடிஜீயருக்கு எதிராக கோஷமிட்டனர்.
அந்நேரத்தில் இரண்டு தரப்பினரும் கல்வீசித் தாக்கிக்கொண்டனர். பிரச்சனைக்கு காரணமாக இருந்த ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, விஸ்வ ஹிந்து பரிஷத் மீது தடியடி நடத்தி அவர்களை போலீசார் கலைத்தனர்
விவசாயி வாங்கிய மாடுகளை பிடித்து வம்பு வளர்த்த ஜீயர் சாமியை பொது மக்கள் , விவசாயிகள் திட்டி விட்டு சென்றனர் .

கருத்துகள் இல்லை: