சனி, 1 ஜூலை, 2017

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எஸ் வி சேகருக்கு கடிதம் எழுதியது தவறா?

Don Ashok :சுபவீ தரத்திற்கு எஸ்.வீ.சேகருக்கு கடிதமே எழுதியிருக்கக் கூடாது
என வருந்தினேன். அப்படிப்பார்த்தால் கலைஞர் தரத்திற்கு ஜெயலலிதாவுடன் அரசியல் செய்திருக்க கூடாது. மதிமாறன் தரத்திற்கு நாராயணனுடன் பேசியிருக்கவே கூடாது. ஆனால் என்ன செய்ய முடியும்? தமிழக அரசியல் சூழல் தரமானவர்கள் vs தரமானவர்கள் என்றில்லாமல் தரமானவர்கள் vs மகா-தரமற்றவர்கள் என்றுதானே இருக்கிறது.
"அதென்ன மாற்றுக் கருத்தினரை மகா-தரமற்றவர்கள் எனச் சாடுவது? அப்படி என்ன திமிர் உங்களுக்கு?" என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம்.
சுபவீ எஸ்.வீ.சேகருக்கு எழுதிய கடிதத்தையும் எஸ்.வீ.சேகர் சுபவீக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தையும் ஒப்பிடுங்கள்.
எஸ்.வீ.சேகரின் கடிதத்தில் சுபவீயைப் பற்றி 'தன் சாதியில் மணமகன் எடுத்தவர். சாதி சங்கத்தில் பொருளாளராக இருந்தார்," என்றெல்லாம் பொய்கள் குவிந்துகிடக்கின்றன.

ஆனால் உண்மையில் அவர் மருமகன்கள் வேற்று சாதிகளை சேர்ந்தவர்கள்.
எந்த சாதி சங்கத்துடனும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை.
இதெல்லாம் அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிந்த ரகசியங்கள் அல்ல. தன் 'வந்ததும் வாழ்வதும்,' சுயசரிதை நூலில் தன் வாழ்க்கையைப் பற்றி ஒளிவுமறைவின்றி எழுதியிருக்கிறார் சுபவீ.
ஆனால் எஸ்.வீ.சேகர் எனும் பார்ப்பன சாதிவெறியரோ எந்த குறைந்தபட்ச தெரிதலும் இல்லாமல், எந்தவித கூச்சநாச்சமும், உறுத்தலும் இல்லாமல் சுபவீயைப் பற்றி பொய்களாக புனைந்திருக்கிறார்.
இதனால்தான் இந்த பொய்சொல்லிகளை மகா-தரமற்றவர்கள் என்கிறேன்.
அதனால்தான் இவர்களை கண்டு கோபம் கொள்வதைவிடவும், அருவெறுப்படைய வேண்டியிருக்கிறது. இவர்களின் சத்தமெல்லாம் வெளியில் கேட்கும் அளவுக்கு தமிழக சமூகச் சூழல் தரம்தாழ்ந்துவிட்டதே என வேதனையடைய வேண்டியிருக்கிறது.
நான் கேட்பதெல்லாம் இதுதான். சுவாதியை பிலால் கொன்றார் என மதக்கலவரத்தை தூண்ட மனசாட்சியின்றி பொய் சொன்னீர்கள்.
2000ரூ நோட்டுக்குள் சிப் இருக்கிறது என மோடியைக் காப்பாற்ற வெட்கமின்றி பொய் சொன்னீர்கள்.
கோட்சே வழி வந்தாலும், எந்த பார்ப்பான் மீது F.I.R உள்ளது என குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் பொய் சொன்னீர்கள்.
எந்தப் பொய்யுமே ஒரிருநாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.
இப்போது மதிமாறன், சுபவீ மீது பொய் சொல்கிறீர்கள்.
மதிப்பிற்குறிய moronகளே இன்னுமா பொய்யை நம்பி தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என நம்புகிறீர்கள்?//
-டான் அசோக்

கருத்துகள் இல்லை: