சனி, 1 ஜூலை, 2017

115 வயதான தமிழக மூதாட்டி மரணம்!

115 வயதான தமிழக மூதாட்டி மரணம்!
மின்னம்பலம் : உலகிலேயே அதிக வயதான மனிதராக இருந்த இத்தாலியைச் சேர்ந்த எம்மா மொரானோ என்ற மூதாட்டி 117 வயதில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் வயதான மூதாட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
தரமற்ற உணவு மற்றும் நாகரீக உணவு பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் நச்சு கலந்த உணவு வகைகளை உண்பதால் 60 வயதில் வர வேண்டிய நோய்கள் 20 வயதிலேயே வந்துவிடுகிறது.30 வயது இளைஞர்கள் மாரடைப்பால் இறக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பண்டைய கால மக்கள் இயற்கையான உணவு வகைகள், மண்பானை சோறு, சுத்தமான குடிநீர் என ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தனர். இதனால் அவர்களின் வாழ்நாள் 60 வயதிலேயே முடியாமல் 100 வயதுக்கு மேல் நீடித்தது. அதன்படி அவர்கள் மகன், பேரன், கொள்ளு பேரன் என மூன்றுக்கும் மேற்பட்ட சந்ததியினரை சந்தித்த பின்னரே உயிரிழக்கின்றனர்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 104 பேரன், பேத்திகளைக் கொண்ட 115 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் பகுதியில் நல்லசுழிகாடு என்ற இடத்தில் வசித்து வந்தவர் மாரப்ப நாடார். இவரது மனைவி வள்ளியம்மாள் (115). இவர்களுக்கு சென்னியம்மாள் (90), கன்னியப்ப நாடார் (75) , கண்ணம்மாள்(68) ஆகிய இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வள்ளியம்மாளின் கணவர் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். தனது கணவரின் இறப்பிற்கு பிறகு வள்ளியம்மாள் பதநீர் காய்ச்சி விற்று தனது மகன் மகளைக் காப்பாற்றி வந்தார்.
இதில் வள்ளியம்மாளின் மூத்த மகள் சென்னியம்மாளுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் 6 பேருக்கும் திருமணமாகி அவர்களின் வாரிசுகள் மற்றும் பேரன், பேத்திகள் என மொத்தம் 45 பேர் உள்ளனர். மகன் கன்னியப்ப நாடாருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்குத் திருமணமாகி மகன், மகள் மற்றும் பேரன், பேத்திகள் என மொத்தம் 18 பேர் உள்ளனர். கடைசி மகள் கண்ணம்மாளுக்கு 6 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களுக்குத் திருமணமாகி பேரன் பேத்தி என மொத்தம் 23 பேர் உள்ளனர். இவ்வாறு மூதாட்டி வள்ளியம்மாவுக்கு மொத்தம் 104 பேரன் பேத்திகள் உள்ளனர்.
இந்நிலையில் தனது பேரன்கள் மாரிமுத்து மற்றும் சேகர் ஆகியோர் அரவணைப்பில் வசித்து வந்த மூதாட்டி கடந்த ஜூன்-29 ஆம் தேதி உயிர் நீத்தார்.
இதுகுறித்து அவருடைய பேரன்கள் கூறியதாவது, “ எங்கள் பாட்டி தினசரி காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்வார். மட்டன் சிக்கன் என அனைத்து வகை அசைவ உணவுகளையும் அருமையாகச் சமைப்பார். அவருக்கு வயதானாலும் பற்கள் கொட்டவே இல்லை. அதனால் கரும்பு முறுக்கு என அனைத்து உணவுகளையும் சாப்பிடுவார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவருடைய உடல்நலம் மிகவும் மோசமாகி இருந்தது. எனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு எங்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டார் என சோகத்துடன் கூறியுள்ளனர்.
இந்நிலையில் பிற ஊர்களிலும் இருந்த அவரது வாரிசுகள் நாமக்கலுக்கு வந்து மூதாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டன

கருத்துகள் இல்லை: