புதன், 28 ஜூன், 2017

சீமான் ஆரியர்கள் வடவர்கள் விரும்புவதை நிறைவேற்ற துடிக்கிறார்!

Damodaran: நியூஸ் 7 சானலில் வியூகம் நிகழ்ச்சியில்...
சீமானின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லமுடியாமல்
Chief editor முகம் வெந்து கரியாகி அசடு வழிந்தான் அந்த நெறியாளர் ( பெயர் தெரியாது )
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த விவாதம் அது...
தமிழரை தமிழன் தான் ஆளவேண்டும்
யார்வேண்டுமானாலும் இங்கே வந்து வாழட்டும்
ஆனால் தமிழன் தான் ஆள வேண்டும்
என்பதுதான் சீமானின் மைய கருத்து.
சீமான் முன் வைத்த வாதங்கள் அற்புதம்
தமிழரை நிச்சயம் எழுச்சி பெற செய்யும்.
அவருடைய கருத்துகள் எல்லாம் எனக்கு என்னுடைய கருத்தாகவே உணர்ந்தேன்...
ஆனால்....ஆனால்....ஆனால்....

தமிழர் எழுச்சி தமிழர் ஆட்சி என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்டு
தமிழர் வாழ்வுக்கும் சமூக நீதிக்கும் தமிழின எழுச்சிக்கும் அரும்பாடுபட்ட நீதிக்கட்சி திராவிட இயக்கம் திமுக வை ..
தமிழின பகைவர்களாக சித்தரிக்கும் கீழ்மையை கயமையை
நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

சீமானுக்கு அவரது கருத்தியலை போதித்ததே
திராவிட இயக்க பகுத்தறிவுதான் என்பதை மறந்து விட்டு நஞ்சை கக்குகிறார்.சீமான்.
சீமான் ஆரியர்கள் வடவர்கள் தமிழினத்தை எப்படி பிரித்தாண்டு அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ ...
அதைத்தான் சீமானும் மற்ற தமிழ் தேசியவாதிகளும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
சீமான் தமிழர்களின் ஆளா ? அல்லது ஆரிய படை தளபதியா என்று தெரியவில்லை.
இன்றும் கூட திமுக என்ற ஒரு கட்சி இங்கே இல்லை என்றால்.....
தமிழகம் எப்போதோ ...தன் அடையாளங்களை இழந்து .. காவியாக ஹிந்தி நாடாக ....சம்ஸ்கிருத கலாசாலையாக....இந்தியர்களின் காலனி நாடாக உருமாறிப்போயிருக்கும் என்பது ...சீமான் உட்பட எல்லோருக்கும் நன்கு தெரிந்த உண்மைதானே...
கருணாநிதி என்னும் ஒற்றை தலைவனால்...ஹிந்தியும் இந்தியர் ஆதிக்கமும் தமிழக எல்லைக்குள் கால் வைக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது என்பது நம் பகைவர்களுக்கே நன்றாக தெரியும்.
அப்படி இருக்க திமுகவை விட்டால் தமிழ்நாட்டுக்கு வேறு நாதி இல்லை.திமுகவைத்த தவிர தமிழர் உரிமைகளை நலன்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே .... உண்மை
திமுகவை குறை கூறி வலுவிழக்க செய்வது
தமிழினத்தை ஆழ் குழியில் தள்ளி மண்ணைப்போட்டு மூடுவதற்கு ஒப்பான செயலாகும்.

கருத்துகள் இல்லை: