

கார்த்திக்.சி
மாட்டுக்கறி கொண்டுசென்றதாக ஜூனைத் கான் என்ற சிறுவன்,
டெல்லியில் .
கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் அரசு ஊழியர் உள்பட நான்கு பேரை
காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பவர்கள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகக்
கொண்டுசெல்பவர்களை, பசுக் காவலர்கள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து
வருகின்றன. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள்
அதிகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் கடந்த இரு
தினங்களுக்கு முன், ரயிலில் மாட்டுக்கறி எடுத்துச்சென்ற இஸ்லாமியச்
சிறுவர்கள், பசுக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
அதில், ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி
கொலைசெய்யப்பட்டான். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இதுவரை டெல்லி அரசு ஊழியர் உட்பட நான்கு பேர்
கைதுசெய்யப்பட்டுள்ளனர். ‘மாட்டுக்கறி உண்பவர்கள் தேச விரோதிகள்’ என்று
கூறி அவர்களைத் தாக்கிய மற்றுமொரு அரசு ஊழியர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் கைதுசெய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறைச் செயலுக்கு எதிராக tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக