ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாகப்
போட்டியிடும் நாடாளுமன்ற
முன்னாள் சபாநாயகர் மீரா குமாரின் வேட்பு மனுவை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து அதில் கையெழுத்திட்டார். அதேபோல் திமுக எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும், திமுக எம்.பி.க்களும் முன்மொழிந்து கையெழுத்திட்டனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்தில் முடிவடைவதையொட்டி, புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஜூலை 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் உள்பட 17 எதிர்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் கடந்த ஜூன் 19ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார் நாளை அல்லது நாளை மறுநாள் வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்று தெரியவருகிறது.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் வேட்புமனுவை தலா 5௦ எம்.எல்.எல்.-க்கள் மற்றும் எம்.பி.-க்கள் முன்மொழிந்து கையெழுத்திட வேண்டும். அதையொட்டி, எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாரின் வேட்புமனுவை அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக சார்பில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்மொழிந்து அதில் கையெழுத்திட்டார். அதே போல் திமுக எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும், திமுக எம்.பி.க்களும் கையெழுத்திட்டனர். இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. அபுபக்கரும் அதில் கையெழுத்திட்டார். அதேபோல் தமிழக காங்கிரஸ் சார்பில் 7 எம்.எல். ஏ.க்கள், மீரா குமாரின் வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்திட்டனர். அதையடுத்து, மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து கையெழுத்திட்ட படிவத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மாணிக் தாகூர் இன்று ஜூன் 26ஆம் தேதி பெற்றுக் கொண்டார்.
வேட்பு மனுத்தாக்கல் முடிந்ததும், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மீராகுமார் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று காங்கிரஸ் ஆதரவு கட்சிகளின் எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மீராகுமாரை ஆதரிக்கும் நிலையில், அதிமுக-வின் 3 அணிகள் தரப்பிலுமே பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. மட்டும் மீராகுமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக