tamil.filmibeat.com - bahanya ;
சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பாலாசிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
நடிகர் பாலா சிங் 1952ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் பிறந்தார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கல்லூரி நாட்களிலேயே மேடையில் நடிக்கத்தொடங்கினார்.
மேடை நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் மலையாள திரையுலகின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானவர் பாலாசிங். 1983 ஆம் ஆண்டு வெளியான மலைமுகலிலே என்ற மலையாள படத்தின் முலம் நடிகராக அறிமுகமானார்.
நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்' படத்தின் மூலம் தமிழில் நடிகராக கால் பதித்தார். அவதாரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பாலாசிங்.
நல்ல வரவேற்பு
அவதாரம் படத்தில் இவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. குணச்சித்திர, வில்லன் நடிகர் இதனால் அவருக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வர தொடங்கின. மளையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் குணசித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார். கடைசியாக மகாமுனி அந்த வகையில் இந்தியன், ராசி, தீனா, புதுப்பேட்டை, விருமாண்டி, என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக மகாமுனி படத்தில் நடித்தார் பாலாசிங். இந்நிலையில் 67 வயதான நடிகர் பாலாசிங் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை குடும்பத்தினர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
திரைத்துறையினர் சோகம் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலாசிங்கின் மரணம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்த ஊரில் அடக்கம் விருகம்பாக்கத்தில் உள்ள பாலா சிங்கின் வீட்டில் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை அவரது சொந்த ஊரான களியக்காவிளைக்கு உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக