திங்கள், 25 நவம்பர், 2019

ஆ.ராசா : அம்பேத்கார் இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் என்று கூறினாரா? .. வீடியோ


கேள்வி :  நம்ம கான்ஸ்டிடியுஷன்ல அம்பேத்கார் என்ன சொல்லி இருக்கார்ன்னா ஒரு பத்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் ரிசெர்வேஷன் .அப்படீன்னு ...
ஆ.ராசா : சொல்லுங்க  சொல்லுங்க ...  அம்பேத்கார் என்ன சொல்லியிருக்கார்ன்னா .. ஒரு பத்து ஆண்டுகளுக்கு பின்னால பார்ப்போம் என்ன சாதகம் இருக்கு .. படிச்சு முன்னேறி இருக்காங்களான்னு பார்ப்போம் .. பார்த்து ஒரு வேலை சமநிலை வந்துவிட்டால் நீக்கிவ்டலாம் .. சமநிலை இல்லைன்னா கண்டினியு பண்ணலாம் .. அவ்வளவுதான்   .. பத்துவருஷதில முடியிறதில்லை  அப்புறம் எக்ஸ்டென் பண்ணுறோம் அவ்வளவுதான் .
பதுவருசத்துகு  அப்புறம் இல்லைன்னு சொல்லல . பதிவருஷத்துக்கு அப்புறம் மறு ஆய்வு செய்வோம் அப்படீன்னுதான் ... சொல்லிருக்கார் ..
கேள்வி : முன்னாடிஇருந்த சமுகத்தை பார்க்கிலும் இப்போதுள்ள யங் ஜெனேரஷன் எல்லாம் தமிழ் தமிழினம்  அப்படீன்னுபோயிட்டு இருக்கிறதால ஜாதி அப்படீன்னு யாரும் பார்க்கிறதில்லை .. என்னோட உள்கருத்து  சொல்லுது .. இன்னும் இந்த ரிசெர்வேசன்தேவையா ?  ஏன் பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும் அப்படீன்னுதானேசொல்லியிருக்கு .. அப்போ ஏன் இன்னும் ரிசெர்வேசன் தேவையா ?    அப்ப அனைத்து மதமும் அனைத்து ஜாதியும் சமம்தானே அய்யா ?  அது உயர்ஜாதி வகுப்புன்னா இருக்கட்டும் கீழ் ஜாதி வகுப்புன்னா இருக்கட்டும் ..
ஆ.ராசா :   இந்த மார்க் எல்லாம் இருக்குலியா . அதை எடுத்து பாருங்க . பிற்படுத்தபட்டோர் எல்லாம் வேலைக்கு போகமுடியுமான்னு பாருங்க . இன்னைக்கெல்லாம் ஒண்ணும் இல்லைங்கறீங்க .. தொட்டுக்கிறோம் சாப்பிட்டுக்கிறோம் ... அதான நீங்க சொல்ல வரீங்க ?  அதாவது .. ஒரு ஜாதி அதிருப்தி ..வெறுப்பு  எல்லாம் மைண்டில இருந்து போயிட்டிங்கிறீங்க .. அதானே சொல்ல வாறீங்க ?

ஆனா யதார்த்த வாழ்க்கையில்  96.5 புள்ளி எடுத்திருக்கார் ஒரு கள்ளன் ,
94  . 4 புள்ளி எடுத்திருக்கார் ஒரு மறவர்.
ஒரு 93.3 புள்ளி ஒரு நாடார் எடுத்திருக்கார்  .. ஆனா பிராமணர் 98 புள்ளி எடுத்திருக்கார்
இப்பரிசெர்வேசனை எடுத்திட்டீங்கன்ன இந்த மெடிகல் காலேஜில இடம் கிடைக்குமான்னு ஒரே ஒரு தடவை ஒரு கணக்கை பார்த்திட்டு   அப்புறம் இந்த கெள்வியி கேட்டிடுங்க அப்புறம் பதில் சொல்றேன் ..

கேள்வி : ஏன் சார் இதே மாதிரித்தான் சைனாவை எடுக்கிட்டாலும்  .. சைனா கம்யுனிசட் கண்ட்ரி   .. எல்லாத்தையும் மக்களுக்காக கொடுக்கிறப்போ இந்தியாவில இருந்துகிட்டு  இந்தியா ஒரு ஜனநாய கண்ட்ரியா இருந்தும் ஒரு மிக்சட் எகொநோமி   ஏன் சார் இந்தியவில கவர்ன்மென்ட்டால எல்லாத்தையும் ஒரு சாதாரண குடிமகனுக்கு  கொடுக்க முடியல ?
ஆ.ராசா : சைனாவில ஜாதி இருந்ததா ?     இல்ல இல்ல ஒரே நிமிஷம் .. சைனாவில ஜாதி இருந்ததா ?
இரண்டாயிரம் வருஷம் உங்க தாத்தவை பாட்டனையும் படிக்க கூடாதுன்னு சட்டம் இருந்ததா?
சைனாவில மனு நீதி இருந்ததா ?
சைனாவில் வந்து ரிக் வேதம் இருந்ததா ?   படிக்காதீன்னு சொல்லியிருந்ததா?
ஒரு வருஷம் இரண்டு வருஷம் இல்லை .. இரண்டாயிரம் வருஷம் உங்க தாத்தனை ..  பரம்பரைன்னா என்னான்னு தெரியுமா?
தாத்தன் பாட்டான் பூட்டன் பூட்டனுக்கு பூட்டன்   ஏழு தலை முறை  ..உன்  ஏழு தலைமுறை வரலாறை சொல்லு     யார் படிசிருகான்னு சொல்லு . யார் கையெழுத்து போட்டிருக்கான்னு சொல்லு அப்புறம் வந்து கேளு ... முடியாது ..
அப்புறம் .. சைனாவில ஜாதி இல்லை சீனாவில் ஒருத்தனை  படிக்காதேன்னு சொல்லலை   அமெரிகாவில் படிக்காதேன்னு சொல்லல .. அவுஸ்திரேலியாவில் படிக்காதேன்னு சொல்லல
அமெரிக்கவிலையும் அவுஸ்திரேலியாவிலையும் .. உலகத்தில் எந்த நாட்டிலும் படிக்காதேன்னு .. அதான் அம்பேத்கார் சொன்னார்
Nowhere  in the world the matters of the constitution has compelled to deal with it  உலகத்தில் இருக்கின்ற எந்த அரசியல் சட்டத்தை எழுதியவனுகும் இந்த சிக்கல் இல்லை எனக்கு இந்த சிக்கல் இருக்கிறது என்று சொன்னார் .
என்ன காரணம் என்றால் இங்கதான் ஒரு சமுதாயத்தை படிக்காதே ...ஒரு சமுதாயத்தை கை எழுத்து போடாதே
அப்ப ரிசெர்வேசன் என்பது ஒரு ஜாதிக்காக கொடுத்தது அல்ல ....
அதுவும் இந்த தென்மாவட்டத்தில  ஆறு மணியான போயி போலீஸ் ஸ்டேசன்ல கையெழுத்து போடணும்னு ஒரு ஜாதி இருந்திச்சா இல்லையா?
அந்த ஜாதிக்கு என்னைக்கு படிப்பு வந்திச்சு ?
அப்ப கைரேகை சட்டத்தை ஒழித்தது யார் ? அதுக்கு பெயரே கைரேகை சட்டம்..  இங்குள்ள முக்குலதொருக்கு கள்ளருக்கு மறவருக்கு பிரமலை கள்ளருக்கு ..
இங்குள்ள முக்குலோத்தொருக்கு  ஆறு மணிக்கு போலீஸ்ல போயி கைநாட்டு வச்சுக்கணும் ..
அந்த கைநாட்டு முறையை மாற்றுவதுதான் ரிசெர்வேசன் ...  சீனாவை எல்லாம் கம்பேர் பண்ண கூடாது .. சைனா வேற இந்தியா வேற ..
கேள்வி :  நான் எதுக்கு சீனாவை கம்பேர் பண்ணினான்னா அதோட எகொனோமிக் ...
ஆ. ராசா ;  ஆங் .. எகொனோமிக் எல்லாம் போயிடக்கூடாது  .. அதாவது ... இருப்பா இருப்பா .. இந்தியவில இருக்கிற ஒரு மிகப்பெரிய ஒரு தனித்த அடையாளம் .. வேறெந்த இடத்திலையும் இல்லாத ஒன்று .. ஜாதி .. அந்த ஜாதிதான் என்னோட கல்வி மறுக்கப்பட்டது
அந்த ஜாதியால் என்னோட நாகரீகம் மறுக்கப்பட்டது
அந்த ஜாதியால் என்னோட வேலை வாய்ப்பு பறிக்க பட்டது
அந்த ஜாதியால் நான் தற்குறியா இருந்தேன் ... கைநாட்டா இருந்தேன்
எனவே அந்த ஜாதியை வைத்து .. எப்படி ஒரு பாலம் உடைந்து போனால் இன்னொரு மாற்று பாலத்தை போடுவோமோ  ...பாலம் கட்டிற வரைக்கும்
அது போல்
ரிசெர்வேசன் என்பது பாலம் ரிபேர் ஆகி போச்சு அந்த சரியாகும்  வரை போடப்படும் ......

கருத்துகள் இல்லை: