Muralidharan Pb :
2/12/1989 அன்று இந்தியாவின் 7வது பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட விபி சிங் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது,"தேசிய முன்னணி தொடக்க விழாவை சென்னையில் நடத்தி, அந்த முன்னணியின் ஆட்சி அமைகிற அளவுக்குப் பாடுபட்ட கருணாநிதி, என்டி ராமராவ், மற்ற தலைவர்கள் எனது நன்றிக்குரியவர்கள்" என்று பாராட்டினார்.
எப்பற்ப்பட்ட தலைவர்?

50களில் ஆச்சரிய வினோபா பாவே பூதான இயக்கம் நடத்திய போது வி பி சிங் தந்து
நிலங்களை தனமாகத் தந்தார். வினோபா மனம் நெகிழ்ந்து உங்களுக்கென்று கொஞ்சம்
நிலத்தை வைத்துக் கொண்டு மீதியுள்ளதை தந்தால் போதும் என்று ஒரு பகுதி
நிலத்தை வி. பி. சிங்கிடமே கொடுத்துவிட்டார். அப்படி வினோபா கொடுத்த
நிலத்தை தனது சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளவில்லை வி பி சிங். மாறாக
கல்வி நிறுவனம் ஒன்றிற்கு எழுதி வைத்து விட்டார். அப்படியே மக்களின்
நன்மதிப்பை பெற்று ஒரு கட்டத்தில் முதல்வரானார். அப்போது உத்தர
பிரதேசத்தில் கொள்ளையர்கள் வன்முறை தலைவிரித்து ஆடிய போது கொள்ளைக்
கூட்டத்தை அடியோடு ஒழிப்பேன் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்.
விபி சிங் சகோதரர் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை, கொள்ளையர்களை என்னால் அடக்க முடியவில்லை, அதனால் பதவியில் இருந்து வெளியேறுகிறன் என்று அறிவித்து பதவியைத் துறந்தார். ஆனால் அவர் இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்திலும் இடம்பெற்று 1989ல் பிரதமராக பொறுப்பேற்றார். இது விபி சிங் என்ற ஒரு மக்கள் தலைவரின் சிறிய வாழ்க்கை வரலாறு.
வி பி சிங் போன்ற ஒரு பிரதமரும் கிடைத்தால் கலைஞர் போல ஒரு மாபெரும் தலைவர் தங்கள் கோரிக்கை வைத்து தனக்கு தேவையானதை பெறுவதில் எவ்வளவு மகிழ்ச்சி? அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று நடந்தது.
சென்னை கடற்கரையில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டம்.
அதில் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி,"இங்கு வீற்றிருக்கும் நமது பிரதமர் அவர்களுக்கு இரண்டு கோரிக்கை வைக்கிறேன். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் என்றும், உள்நாட்டு விமான நிலையத்தை காமராஜர் உள்நாட்டு விமான நிலையம் என்று பெயரிட வேண்டுகிறேன்" என்று பேச்சில் ஒரு கோரிக்கை வைக்கிறார்.
முதல்வர் பேசிக்கொண்டிருக்கும் போதே,பிரதமர் விபி சிங், சற்று தொலைவில் இருந்த தனது உதவியாளரை கூப்பிட்டு, ஹாட்லைனில் டெல்லிக்கு தொடர்பு கொள்கிறார் யாரிடமோ பேசுகிறார். பிறகு அவரது பேச்சின் போது, "கலைஞர் கருணாநிதி கேட்டது போல் சென்னை விமான நிலையம் அண்ணா பன்னாட்டு விமானம் நிலையம் என்றும், காமராஜர் உளநாட்டு விமான நிலையம் என்றும் பெயர் மாற்றப்பட உள்ளது என்பதை நான் இங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தின் முன்னர் ஒரு வாக்குறுதியாக அளிக்கிறேன்" என்று குறிப்பிட்டார். அன்று அவர் அளித்த உறுதிமொழியை அரசணையாக நிறைவேற்றியும் இன்று வரை அண்ணா பன்னாட்டு விமான நிலையமாகவும், காமராஜர் உள்நாட்டு விமான நிலையமாகவும் நிலைத்து நிற்கிறது.
இந்திய அமைதிப்படை திரும்பப் பெற்றது,
காவிரியில் நிரந்தரமாக 204 டிஎம்சி,
மத்திய அரசு பணிகளில் 27% பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு,
இவரது ஆட்சியில் நடைபெற்ற சில நிகழ்வுகள்.
நினைவு போற்றுவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக