மாலைமலர் : சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும்
காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆளுநர் மாளிகை சென்று, ஆட்சிமையக்க
பெரும்பான்மை இருப்பதாக கூறி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்தனர்.
மகாராஷ்டிர
மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள்
இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில்,
சனிக்கிழமை அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜகவின் தேவேந்திர
பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை
கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதனால்
தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது.
அஜித் பவாரின் முடிவு கட்சியின் முடிவு அல்ல என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடனடியாக உடனடியாக விளக்கம் அளித்தார். அத்துடன் பாஜக ஆட்சியமைத்ததை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், தங்கள் கூட்டணிக்கு 165 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அங்கு ஆளுநர் மாளிகை அதிகாரியை சந்தித்து, ஆட்சியமைக்க தங்களுக்குத்தான் பெரும்பான்மை இருப்பதாக கூறி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக