சனி, 30 நவம்பர், 2019

கோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவியை 4 நண்பர்கள் பாலியல் கொடுமை

அருள்குமார்- நக்கீரன் : கோவையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ராகுல்(22), பிரகாஷ்(22),நாராயணமூர்த்தி(32),கார்த்திகேயன்(22) ஆகியோருடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே 26.11.2019 அன்று பிறந்தநாள் கொண்டாடுவதற்காக வெளியில் சென்றனர். அங்கு 4 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய சிறுமி சோர்வாக இருப்பதைக் கண்ட பெற்றோர் விசாரித்தபோது, தன்னை 4 பேர் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து கூறினார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஆர்எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 
 Veerakumar -   /tamil.oneindia.com : கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அப்பகுதியிலுள்ள ஒரு பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ராகுல் (22), பிரகாஷ் (22), நாராயணமூர்த்தி (32), கார்த்திகேயன் (22) போன்ற வயதில் மூத்த வாலிபர்களுடன், அந்த மாணவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சில தினங்கள் முன்பாக, நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக அந்த மாணவி கூறியுள்ளார்.

அவரது பெற்றோரும், மாணவியை தனியாக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சென்ற இடத்தில் கிடைத்த தனிமையை பயன்படுத்திக் கொண்டு, மணிகண்டன் என்ற வாலிபர், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதை ராகுல், பிரகாஷ் உள்ளிட்ட மற்ற 4 நண்பர்களும் வீடியோ எடுத்து ரசித்துள்ளனர்.
கடும் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, அழுதபடியே வீடு திரும்பியுள்ளார். ஆனால் வழக்கமான உற்சாகமின்றி மாணவி, சோர்வாகவும், அழுதபடியும் இருப்பதை கவனித்த அவரது பெற்றோர், அதுபற்றி கேட்டுள்ளனர். அப்போதான், நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல் உள்ளிட்ட 4 பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டனை தேடி வருகிறார்கள். பிறந்த நாள் கொண்டாட சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை, கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: