வெள்ளி, 29 நவம்பர், 2019

1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு வழங்கும் உத்தர பிரதேச பாஜக அரசு வீடியோ


தினமணி : சோன்பத்ரா: உத்தரபிரதேச மாநில பள்ளி ஒன்றில் ஒரு லிட்டர் பாலில் நீர் கலந்து 81 குழந்தைகளுக்கு விநியோகம் செய்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டம் மாநிலத்தின் வளர்ச்சி குறைந்த பகுதிகளில் ஒன்றாகும். இங்கு பல குடும்பங்கள் வறுமையின் பிடியில் உள்ளதால், மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒரு வேளை உணவாவது கிடைக்கும் என்பதற்காக குழந்தைகள் அரசு பள்ளிகளுக்கு செல்கின்றன.
இங்குள்ள சோப்பன் பகுதியில் உள்ள அரசு முதன்மை பள்ளியில் 171 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் குறிப்பிட்ட பள்ளியில் ஒரு லிட்டர் பாலில் நீர் கலந்து 81 குழந்தைகளுக்கு விநியோகம் செய்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது. பசியுடன் பள்ளிக்கு வந்த 81 பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு சமைக்கும் பெண் ஊழியர், 1 லிட்டர் பாலை அலுமினிய வாளியில் ஊற்றி அதில் தண்ணீர் கலந்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்த விடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவை கிராம நிர்வாக சபை ஊழியர் ஒருவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது இந்த சம்பவம் தொடர்பான விடியோ வெளியாகி வைரலாகப் பரவிய பின், அந்தப் பள்ளிக்கு தேவையான கூடுதல் பால் உடனடியாக வழங்கப்பட்டதை மாவட்ட நிர்வாகம் தற்போது உறுதி செய்தது. கடந்த இரு மாதங்களுக்கு முன் உ.பி மாநிலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ரொட்டியுடன் உண்பதற்கு உப்பு கொடுத்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்

கருத்துகள் இல்லை: