வியாழன், 28 நவம்பர், 2019

திராவிட அரசியலை புரிந்து கொள்ள தவறிய ஈழ அரசியல் .. பெரியாரை புறக்கணித்த புலிகள் ..

Kanimozhi MV : பத்து ஆண்டுகளுக்கு முன் வரை தீவிர ஈழ - புலிகள் ஆதரவாளராக இருந்தேன் ; திராவிடர் இயக்க பின்னனியில் இருந்து வருவோருக்கு அது இயல்பான ஒன்று!
கலைஞரை குற்றம் சொல்ல தொடங்கியபோதும் அமைதியாக இருந்தேன் ; ஆனால் அடித்தளம் ஆட்டம் கண்டது! பொதுவில் அதைப் பற்றி பேசியது இல்லை;
திமுக அழிந்தே தீர வேண்டும் என்ற போது புலிகள் யாரை எல்லாம் அழித்தார்கள் - ஈழ விடுதலையால் தமிழ் நாடு 90 களுக்குப் பின் எப்படி ஆட்டம் கண்டது என்பதை படிக்க தொடங்கினேன்!
அப்போதும் பொதுவில் பேசியது இல்லை!

தந்தை பெரியார் கன்னடர் அவர் என்ன செய்தார் தமிழர்களுக்கு என்றபோது நரம்புகளில் கட்டப்பட்டிருந்த ஈழம் அறுபடும் சத்தம் எனக்கு நன்றாக கேட்டது!
இங்கே பேசும் பதர்களுக்கு ஈழ மக்கள் என்ன செய்வார்கள் என்பது அரசியல் அறியாதவர் பேசலாம் ; எந்த உந்து சக்தி ? எந்த பணம் ? எந்த அரசியல் இவர்களை பேச வைக்கிறது என்று ஆராய்ந்த போது புலம் பெயர்ந்த தமிழர்கள் பெருமளவில் இருந்தனர் ;
ஒரே கேள்வி தான் ! ஈழ மண்ணில் போராட்டம் நடந்த போது திராவிட அரசியலும் இயக்கமும் தான் ஆதரவு தந்தது ; அந்த அரசியலை அழிக்க நீங்கள் பின்னனியில் இருப்பீர்களா? என்ற என் கேள்வியில் என்ன அநீதி உள்ளது ?
இந்த மண்ணில் தந்தையாக இருந்து போராடியவரை அய்யா என்று அழைத்து புது விளக்கம் கொடுத்த போது பெரியாருக்கு பட்டத்தை பிச்சை போட இவர்கள் யார் ? என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு?

தந்தை பெரியாரின் போராட்டங்களின் வேலைத்திட்டங்களை கொச்சைப்படுத்த ஆர்எஸ்எஸ் இயக்கும் பொம்மைகளுக்கு என்ன தகுதி இருக்கிறது ? என்ற கேள்வி எழுந்தது!
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்
பெரியாரை சுவாசிக்கும் எங்கள் மூச்சு இருக்கும் வரை எவன் திராவிட அரசியலை அழித்து அரியணை ஏறுவான் என பார்க்கிறோம்!
திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளி உங்களை இணைக்கும் என்றால் அந்த புள்ளியே எங்களை உங்களை விரட்ட இயங்கும் !
இன்று பொதுவில் பேச தள்ளியது இவை தான்!
இனியும் தொடரும் ! ...


பாகம் 2  : திராவிட இயக்கத் தலைவர்கள் தமிழ்நாட்டில் தானே போராடினார்கள்? அவர்கள் பேசாத தமிழர்கள் நலன் எதை இன்றைய தமிழ்த்தேசியம் பேசுகிறது?!
ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை;
இவர்கள் பேசும் தமிழ்த்தேசிய பின்னணியில் இருப்பது சைவ மத பற்று ! வெள்ளாளர் ஜாதி வெறி! தமிழர்கள் சைவர்கள் என்ற குரல் எங்கிருந்து வருகிறது என புரிந்து கொள்ளுங்கள்!
ஈக்வேஷன் இஸ் வெரி சிம்பிள்!
தமிழ்த்தேசியம் = சைவர்கள் நலன் !
திராவிடம் பேசியது தமிழர்கள் நலன் !!

கருத்துகள் இல்லை: