மின்னம்பலம் : சிவசேனா,
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நேற்று (நவம்பர் 25)
மும்பையில் உள்ள ஹோட்டலில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில், ஒரே
இடத்தில் அணிவகுத்து, ‘பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் செய்ய மாட்டேன்’
எனக் கூட்டாக உறுதிமொழி ஏற்றனர்.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருந்தபோது, பெரும் திருப்பமாக யாரும் எதிர்பார்க்காத வகையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்.
இதனையடுத்து,
தேவேந்திர பட்னாவிஸுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங்
கோஷ்யாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை - என்சிபி - காங்கிரஸ் ஆகிய
மூன்று கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனுத் தாக்கல் செய்தன. அந்த
மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகியோா்
அடங்கிய அமா்வு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை விசாரித்தது. நேற்று
(நவம்பர் 25) தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம்
இன்று காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தது.
gin: 0px; opacity: 0; overflow: hidden; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"> இந்த நிலையில், தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதை உறுதி செய்யும் வகையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸைச் சேர்ந்த 162 எம்.எல்.ஏக்கள் நேற்று இரவு ஹயாத்தி ஹோட்டலில் அணிவகுத்தனர். மூன்று கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, “இக்கூட்டணி மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் தனது பலத்தை காட்ட விரும்புகிறது” என்றார். “எங்கள் சண்டை அதிகாரத்துக்காக மட்டுமல்ல, எங்கள் சண்டை‘சத்யமேவ் ஜெயதே’. நீங்கள் எங்களை உடைக்க எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நாங்கள் ஒன்றுபடுவோம்” என்று பாஜகவைச் சுட்டிக்காட்டி அவர் கூறினார்.
0; overflow: hidden; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"> “நாங்கள் திரும்பி வருவோம் என்று நான் கூறவில்லை. ஆனால் நாங்கள் திரும்பி வந்துவிட்டோம் என்று சொல்கிறேன்” என்று தாக்கரே மேலும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து என்சிபி தலைவர் சரத் பவார் பேசினார். பாஜக மீது கடும் குற்றச்சாட்டை வைத்த இவர், பாஜக கட்சி, கோவா மற்றும் வேறு சில மாநிலங்களில் அதிகாரத்தைப் பெற அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வழிகளில் முயற்சி செய்ததைப் போல மகாராஷ்டிராவிலும் முயற்சி செய்திருக்கிறது எனக் கூறினார். “இன்று ஆட்சியில் இருப்பவர்கள் பெரும்பான்மை இல்லாதபோதிலும் சில மாநிலங்களில் அரசாங்கத்தை அமைத்துள்ளனர். எங்களிடம் இன்று 162 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்” என்று பவார் கூறினார்.
மேலும், “எங்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அஜித் பவார் சென்று விட்டார். அவரை பொறுப்பில் இருந்து நீக்கி விட்டோம். கொறடா உத்தரவு பிறப்பிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை. நாங்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அவர்களும் இதனையே கூறினார்கள். என்ன நடந்தாலும் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். சட்டவிரோதமாக பதவியில் இருப்பவர்கள் நீக்கப்படுவார்கள். சட்டப்படியாகவும், ஜனநாயகமாகவும் நாங்கள் பதவியேற்போம்” எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து, ஹோட்டல் ஹயாத்தில் கூடியிருந்த சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஓர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். “சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் தலைமையில் நான் எனது கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன். நான் எவற்றாலும் கவர்ந்திழுக்கப்பட மாட்டேன். பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் செய்ய மாட்டேன்” என 162 எம்.எல்.ஏக்களும் உறுதிமொழி எடுத்தனர்.
162 எம்.எல்.ஏக்கள் மூன்று கட்சி கூட்டணிக்கு உறுதிமொழி எடுத்துக் கொண்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆதித்யா தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ், என்சிபி மற்றும் சிவசேனா இன்று (நேற்று) தனது 162 எம்.எல்.ஏக்களை ஊடகங்கள் முன் வழங்கியது. நாங்கள் ஒன்றாக உள்ளோம்” எனப் பதிவிட்டிருந்தார்.
ஆளுநருக்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இன்று காலை 10.30 மணியளவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருந்தபோது, பெரும் திருப்பமாக யாரும் எதிர்பார்க்காத வகையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்.
gin: 0px; opacity: 0; overflow: hidden; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"> இந்த நிலையில், தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதை உறுதி செய்யும் வகையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸைச் சேர்ந்த 162 எம்.எல்.ஏக்கள் நேற்று இரவு ஹயாத்தி ஹோட்டலில் அணிவகுத்தனர். மூன்று கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, “இக்கூட்டணி மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் தனது பலத்தை காட்ட விரும்புகிறது” என்றார். “எங்கள் சண்டை அதிகாரத்துக்காக மட்டுமல்ல, எங்கள் சண்டை‘சத்யமேவ் ஜெயதே’. நீங்கள் எங்களை உடைக்க எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நாங்கள் ஒன்றுபடுவோம்” என்று பாஜகவைச் சுட்டிக்காட்டி அவர் கூறினார்.
0; overflow: hidden; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;"> “நாங்கள் திரும்பி வருவோம் என்று நான் கூறவில்லை. ஆனால் நாங்கள் திரும்பி வந்துவிட்டோம் என்று சொல்கிறேன்” என்று தாக்கரே மேலும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து என்சிபி தலைவர் சரத் பவார் பேசினார். பாஜக மீது கடும் குற்றச்சாட்டை வைத்த இவர், பாஜக கட்சி, கோவா மற்றும் வேறு சில மாநிலங்களில் அதிகாரத்தைப் பெற அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வழிகளில் முயற்சி செய்ததைப் போல மகாராஷ்டிராவிலும் முயற்சி செய்திருக்கிறது எனக் கூறினார். “இன்று ஆட்சியில் இருப்பவர்கள் பெரும்பான்மை இல்லாதபோதிலும் சில மாநிலங்களில் அரசாங்கத்தை அமைத்துள்ளனர். எங்களிடம் இன்று 162 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்” என்று பவார் கூறினார்.
மேலும், “எங்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அஜித் பவார் சென்று விட்டார். அவரை பொறுப்பில் இருந்து நீக்கி விட்டோம். கொறடா உத்தரவு பிறப்பிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை. நாங்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அவர்களும் இதனையே கூறினார்கள். என்ன நடந்தாலும் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். சட்டவிரோதமாக பதவியில் இருப்பவர்கள் நீக்கப்படுவார்கள். சட்டப்படியாகவும், ஜனநாயகமாகவும் நாங்கள் பதவியேற்போம்” எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து, ஹோட்டல் ஹயாத்தில் கூடியிருந்த சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஓர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். “சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் தலைமையில் நான் எனது கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன். நான் எவற்றாலும் கவர்ந்திழுக்கப்பட மாட்டேன். பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் செய்ய மாட்டேன்” என 162 எம்.எல்.ஏக்களும் உறுதிமொழி எடுத்தனர்.
162 எம்.எல்.ஏக்கள் மூன்று கட்சி கூட்டணிக்கு உறுதிமொழி எடுத்துக் கொண்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆதித்யா தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ், என்சிபி மற்றும் சிவசேனா இன்று (நேற்று) தனது 162 எம்.எல்.ஏக்களை ஊடகங்கள் முன் வழங்கியது. நாங்கள் ஒன்றாக உள்ளோம்” எனப் பதிவிட்டிருந்தார்.
ஆளுநருக்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இன்று காலை 10.30 மணியளவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக