வெள்ளி, 29 நவம்பர், 2019

6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்டின் ஜிடிபி 4.5% ஆக குறைந்தது

என்ன பேசினார் tamil.oneindia.com - shyamsundar : டெல்லி: நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபியில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.
இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. ஆனால் இந்த பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி மோசமான சரிவை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த காலாண்டிற்கான ஜிடிபி ஏற்கனவே 5% என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே 6 ஆண்டுகளில் மிக குறைவான ஜிடிபி ஆகும். தற்போது 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த வருடம் இதே இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 6.9% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வருடம் மோசமான வீழ்ச்சியை அடைந்துள்ளது.

கடைசியாக 2012-13 ஜனவரி மார்ச் காலாண்டில் 4.3% ஆக ஜிடிபி இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் 8 மூல நிறுவனங்களின் உற்பத்தியும் 5.8% ஆக குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் லோக்சபாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார மந்த நிலை தற்போது நிலவி வருகிறது. ஆனால் அது மோசமான நிலையை அடையவில்லை. பொருளாதார பின்னடைவு என்னும் நிலை உருவாகவில்லை. அது இனியும் உருவாகாது. இந்தியாவின் ஜிடிபி நன்றாகவே இருக்கிறது. இந்தியாவின் உண்மையான ஜிடிபி 2009-2014ல் 6.4% ஆக இருந்தது. 2014-2019 ல் ஜிடிபி மதிப்பு 7.5% ஆக உள்ளது. இதனால் ஜிடிபி குறித்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். வேலைவாய்ப்பு போதுமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது, என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவரின் பேச்சுக்கு மாறாக தற்போது இந்தியாவின் ஜிடிபி மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது

கருத்துகள் இல்லை: