
இந்த
வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது போலீஸ் காவலிலிருந்து
மோகன்ராஜ் தப்பிக்க முயன்றபோது போலிஸார் அவரைச் சுட்டுக் கொன்றனர். பின்னர்
மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த
வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் 2012 நவம்பர் 1 ம் தேதி மற்றொரு
குற்றவாளியான மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பை
எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் மேல்முறையீடு செய்தார்,
ஆனால் உயர் நீதிமன்றம் மனோகரனின் தண்டனையை கடந்த 2014-ல் உறுதி செய்தது.
அதை எதிர்த்து மனோகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச
நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
உச்ச
நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ததையடுத்து, டிசம்பர் 2 ஆம் தேதி
தூக்கிலிட வேண்டும் என்று கோவை நீதிமன்றத்தின் உத்தரவிட்டது. இந்த
நிலையில், கோவை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி
வைத்துள்ளது.
ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு என மனோகரன் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதோடு, 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக