செவ்வாய், 26 நவம்பர், 2019

மகாராஷ்டிரா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ... உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

/tamil.oneindia.com - Veerakumar :   டெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக- என்சிபி அஜித் பவார் பிரிவு இணைந்து ஆட்சி அமைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
  10:44 AM, 26 Nov நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் டிவி சேனல்களில் ஒளிபரப்ப வேண்டும். உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு . 
10:40 AM, 26 Nov மகாராஷ்டிராவில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
10:38 AM, 26 Nov உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வாசிக்க தொடங்கினர் 
10:38 AM, 26 Nov நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று முடியும் வரை எந்த விதமான கொள்கை முடிவுகளையும் எடுக்க தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சிவசேனா புதிய மனுத் தாக்கல். 
7:43 AM, 26 Nov புதிய அரசுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

3:55 PM, 25 Nov மகா. துணை முதல்வர் அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்கு ரத்து; அஜித்பவார் மீதான வழக்கில் ஆதாரம் இல்லை என கூறி வழக்கு முடித்து வைப்பு. 
11:56 AM, 25 Nov மகாராஷ்டிரா வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
11:44 AM, 25 Nov 154 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தெரிவிக்கும் பிரமாண பத்திரத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு 
11:25 AM, 25 Nov என்சிபி எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் என்னிடம் உள்ளது: கபில் சிபல் 
11:25 AM, 25 Nov ஜனாதிபதி ஆட்சியை அதிகாலை 5.17 மணிக்கு விலக்கிக் கொண்டு காலை 8 மணிக்கு பட்னாவிஸுக்கு அவசரம் அவசரமாக பதவி பிரமாணம் செய்து வைத்தது ஏன்? சிவசேனா சார்பில் ஆஜரான கபில்சிபல் கேள்வி
 11:21 AM, 25 Nov மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தேவேந்திர பட்னாவிஸ்
 11:21 AM, 25 Nov நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டாம்; கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வேண்டும்- முகுல் ரோத்தகி 
11:19 AM, 25 Nov அஜித்பவார்தான் சட்டசபை குழு தலைவர்; அவர் கொடுத்த ஆதரவு கடிதம் அரசியல் சாசனப்படி செல்லும்- அஜித்பவார்தான் உண்மையான என்சிபி - வழக்கறிஞர் மணீந்தர் சிங் 
11:16 AM, 25 Nov கடந்த காலங்களில் 24 மணிநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது: உச்சநீதிமன்றம் 
11:07 AM, 25 Nov நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்- அனைத்தையுமே நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது: முகுல் ரோத்தகி
 11:05 AM, 25 Nov பட்னாவிஸ் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா? இல்லையா? உச்சநீதிமன்றம் கேள்வி 
11:03 AM, 25 Nov உச்சநீதிமன்றத்தில் துஷார் மேத்தா வாதம் முடிவடைந்த நிலையில் பட்னாவிஸ் தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தகி வாதம் 
10:51 AM, 25 Nov 54 என்சிபி எம்.எல்.ஏக்கள் கையெழுத்துடன் ஆளுநரிடம் அஜித்பவார் கொடுத்த கடிதமும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் 
10:45 AM, 25 Nov தேவேந்திர பட்னவிஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் 
10:31 AM, 25 Nov மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதம் தந்தனர் என்சிபி, காங். சிவசேனா தலைவர்கள் 
10:14 AM, 25 Nov மகாராஷ்டிரா ராஜ்பவனுக்கு சென்றனர் காங்- சிவசேனா- என்சிபி தலைவர்கள் 
10:10 AM, 25 Nov ஆளுநரை இன்று சிவசேனா- காங். என்சிபி தலைவர்கள் சந்திக்க உள்ளனர்: சஞ்சய் ராவத் 
10:10 AM, 25 Nov பட்னாவிஸ் பதவி விலகாவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிப்போம்- என்சிபி மூத்த தலைவர் நவாப் மாலிக்

Read more at: https://tamil.oneindia.com/news/india/maharashtra-government-formation-live-updates-368133.html

கருத்துகள் இல்லை: