வியாழன், 28 நவம்பர், 2019

தமிழ் அறிவிப்பு பலகைகள் சேதம்; இலங்கை பிரதமர் கண்டனம்


தினமலர் : கொழும்பு : "அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்திய பயணத்தை தடுக்கம் நோக்கிலேயே தமிழ் அறிவிப்பு பலகைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன'' என இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே கூறினார்.இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்றார். தன் அண்ணனும் முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சேவை அவர் பிரதமராக நியமித்தார். இதையடுத்து அதிபர் கோத்தபய தன் முதல் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு 29ம்தேதி வருகிறார். இந்நிலையில் இலங்கையில் தமிழில் எழுதப்பட்டிருத்த அறிவிப்பு பலகைகளை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இது அங்கு தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ;
இது குறித்து பிரதமர் மகிந்தா ராஜபக்சே கூறியதாவது: அதிபர் கோத்தபயவின் டில்லி பயணத்தை சீரழிக்கும் நோக்கில் தான் தமிழ் அறிவிப்பு பலகைகளை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். புதிய தமிழ் அறிவிப்பு பலகைகளை மீண்டும் அதே இடத்தில் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். இலங்கை - இந்தியா உறவை சீரழிக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மகிந்தா ராஜபக்சே கூறினார்.

கருத்துகள் இல்லை: