அமெரிக்க தர்மம் அழியும் போதெல்லாம் அவதரிக்கும் கிருஷ்ண பரமாத்மாகளில் ஒருவரான வில்லிஸ்க்கே வந்தது சோதனை! இப்போது அதே அமெரிக்க பொருளாதார விதியே சொந்த
மகளுக்கு பாட்டு கொடுக்கக்கூடாது என்று தடை போடுகிறது. அதை சப்தநாடியும்
ஒடுங்கும் வண்ணம் ஏற்கிறார் இந்த ஆக்சன் ஹீரோ. வின்னர் கைப்புள்ளையை விட
காமடியாக இல்லை இது?
டைஹார்ட் (Die Hard) வரிசைப் படங்களை பார்த்திருப்பீர்கள். அதன் நாயகன் புருஸ் வில்லிஸ் (Bruce Willis)
ஒருபக்கம் தனது குடும்ப உறவுகளைக் காப்பாற்ற உயிரை கொடுத்து போராடுவார்.
மறுபக்கம், அமெரிக்க மக்களை அநியாயத்திலிருந்தும், அக்கிரமங்களில்
இருந்தும் காப்பாறியே தீருவது என்று பல்வேறு இன்னல்களுக்கிடையிலும்,
சளைக்காமல் போராடி வெற்றியும் பெறுவார். இறுதியில் வில்லன்களை வீழ்த்திய
வெற்றிக் களிப்புடன் கிறிஸ்மஸ் கொண்டாடுவார்கள். நாட்டைக் காத்த
வில்லிஸுக்கு வாழ்த்துக்கள் குவியும்!
ஆனால் அமெரிக்க தர்மம் அழியும் போதெல்லாம் அவதரிக்கும் கிருஷ்ண பரமாத்மாகளில் ஒருவரான வில்லிஸ்க்கே வந்தது சோதனை!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-டியூன் (I-Tune) இசை துணுக்குகளை, பாடல்களை உலகெங்கும் பலரும் வாங்குகிறார்கள். வாங்கும் போது ஆப்பிள் நிறுவனம் முன்வைக்கும் காப்புரிமை ஒப்பந்தத்தின்படி, ஐ-டியூன் வாங்குவதாலேயே வாடிக்கையாளர்களுக்கு அது சொந்தமாகிவிடுவதில்லை, மாறாக ஒருவர் அந்த பாடல்களை வாங்கும் போது அதை தான் மட்டும் கேட்பதற்கு உரிமத்தை வாங்குவதாகவும், மற்றவர்களுக்கு எந்த வகையில் கொடுத்தாலும் அதுதிருட்டு(Piracy), ஒப்பந்தத்தை மீறுதல் எனவும் அதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், நீங்கள் உங்கள் ஐ-டியூன்களை உங்கள் குழந்தைகளுக்கு கூட கொடுக்க முடியாது என்றாகிறது. அதாவது வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் ஒரு சாக்லேட் வாங்கினால், நீங்களே சாப்பிட்டு காலி செய்யவேண்டும், அதை வேறொருவருக்கு கொடுக்கக் கூடாது, கொடுக்கவும் முடியாது. ஒரு புதுச் சட்டை வாங்கினால் அதை நீங்கள் மட்டுமே அணியவேண்டும், வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது. கொடுத்தால் காப்புரிமையை மீறுகிறீர்கள்.
சமீபத்தில், புருஸ் வில்லிஸ் தான் சேர்த்து வைத்திருக்கும் ஐ-டியூன் தொகுப்புகளை(Collections) தனக்கு பின் தனது மூன்று மகள்களுக்கு கொடுக்க முடியாது என்று அறிந்தவுடன், கொதித்து போய்விட்டதாகவும், இந்த அநியாயத்தை முறியடிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் முன்னனி நாளேடுகளில் செய்தி வெளிவந்தது.
நாம் வாங்கும் பொருட்களை நமது அன்பிற்க்குரியவர்களுக்கு பரிசளிப்பதோ, அல்லது நமக்கு பின்னர் நம் குழந்தைகளுக்கு அதை கொடுப்பதோ ஒரு எளிய நடைமுறை, உலகெங்கிலும் நிலவி வரும் சொத்துடமை மற்றும் இரத்த உறவு சார்ந்த சமூக அமைப்பின் குடும்ப மதிப்பீடும் அதுவே. ஆனால் இன்றைய சந்தைப் பொருளாதாரம், குடும்ப உறவுகள் விழுமியங்கள் எதையும் மதிப்பதில்லை, அது அனைவரையும் தனது நுகர்வோர்களாக மட்டுமே பார்க்கிறது. நீங்கள் வாங்கிய பொருளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் அந்நிறுவனத்திற்கு ஒரு வாடிக்கையாளர் குறைகிறார், லாபம் குறைகிறது. இப்படி அனைத்தையும் பரிவர்த்தனை, லாப அடிப்படையில் மதிப்பீடு செய்வதன் மூலம் சொல்லிக் கொள்ளப்படும் குடும்ப மதிப்பீடுகளை சிதைக்கிறது.
குடும்ப மதிப்பீடுகளுக்காவும், அநியாயதிற்கு எதிராகவும் சளையாமல், உயிரையும் பணயம் வைத்து போராடக்கூடிய புருஸ் வில்லிஸ் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நியாயமற்ற ஒப்பந்த்தத்தை பார்த்ததும் கொதித்து போய் எதிர்த்து போராடுவது நமக்கு சாதாரணமானதாக தோன்றலாம். ஆனால் அந்த செய்தி வெளியான சிலநாட்களிலேயே அது வெறும், ‘வதந்தி’ என்றும் இன்று வரை புருஸ் வில்லிஸோ அவரது வழக்குறைஞர்களோ இந்த விவகாரம் குறித்து ’எந்த கருத்தையும்’ தெரிவிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாயின. திரையில் பல தடைகளையும் இன்னல்களையும் விடாப்பிடியாக போராடி வெற்றிபெறும் ஹீரோக்கள், நிஜத்தில் டம்மி பீஸாக இருப்பது மீண்டுமொருமுறை நிரூபணமாயிருக்கிறது.
டை ஹார்டு வரிசைப்படங்களில் கிறிஸ்மஸுக்கு முந்திய நள்ளிரவில் மனைவியையோ, மகளையோ, நண்பனையோ காப்பதற்கு மாபெரும் அதிரடி சண்டைகள் போட்ட ப்ரூஸ் இங்கே நிஜ வாழ்க்கையில் தனது மகள்களுக்கு கேவலம் ஒரு ஐ-டியூன் சமாச்சாரத்தைக் கூட கொடுக்க முடியவில்லை. அதை எதிர்த்து சண்டையும் போட முடியவில்லை. மூலதனத்துக்கு முன்னால் கைகட்டி நிற்கிறது இமேஜ். டை ஹார்டு நான்காவது பாகத்தில் வில்லன்கள் இணையத்தில் புகுந்து பல்வேறு அரசு மற்றும் பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான ஆவணங்களை சிதைக்க முயல்வார்கள். அது நடந்துவிட்டால் அமெரிக்க பொருளாதாரமே சிதறி விடும் என்று வீர வசனம் பேசுவார் இந்த வில்லிஸ். இப்போது அதே அமெரிக்க பொருளாதார விதியே சொந்த மகளுக்கு பாட்டு கொடுக்கக்கூடாது என்று தடை போடுகிறது. அதை சப்தநாடியும் ஒடுங்கும் வண்ணம் ஏற்கிறார் இந்த ஆக்சன் ஹீரோ. வின்னர் கைப்புள்ளையை விட காமடியாக இல்லை இது?
இந்த பரமாத்மாக்கள் திரையில் எந்த ’அராஜக’ சக்திகளை, அநியாயத்தை எதிர்த்து போராடுகிறார்களோ அதே அநியாயத்தை வால்ஸ்ட்ரீட் முற்றுக்கை போராட்டத்தில் பங்குகொண்டு நடைமுறையில் நிகழ்த்திவருகிறார்களே, அந்தமக்கள் தான் உண்மையிலேயே அமெரிக்காவின் வீரர்கள், ஹீரோக்கள்!

படிக்க
Apple, Bruce Willis And Internet Immortality
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக