தஞ்சாவூர் : சோழ மன்னன் ராஜராஜன், 1,027வது சதய விழா அழைப்பிதழில் பெயர்
போடப்பட்டும், தி.மு.க., மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம்
கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மேலும், அ.தி.மு.க., வி.ஐ.பி.,க்களும்,
நகர மக்களும் பங்கேற்காததால், சதய விழா களையிழந்தது.
தஞ்சை பெரிய கோவிலை, சோழ மன்னன் ராஜராஜன், 1,000 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணித்தார். இந்த கோவில், ஆட்சித் துறை மட்டுமின்றி கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், கல்வெட்டியல் என, பல துறைகளில் அம்மன்னன் சிறந்து விளங்கியதுக்கு சான்றாக விளங்குகிறது.ராஜராஜன், ஐப்பசி சதய நட்சத்திரத்தில் பிறந்ததையொட்டி, அம்மன்னன் ஆட்சிக்காலம் முதல், இன்று வரை, ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா, தஞ்சை பெரிய கோவிலில் நேற்று காலை, 10 மணிக்கு துவங்கியது. சதய விழா குழு தலைவர் தங்கமுத்து வரவேற்றார். கலெக்டர் பாஸ்கரன் தலைமை வகித்தார். பார் போற்றும் வகையில் ஆட்சி புரியும் புரட்சி தலைவி, தங்க தாரகை, காவேரி தாய், அம்மா அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு இந்த வீணா போன நம்பிக்கையை உடைத்தெறிய வேண்டும், தனி பெரும்பான்மையுடன் ஆட்சி புரியும் அம்மா இதை செய்வாரா?
ராஜராஜன், "சதய' துவக்க விழா அழைப்பிதழில் சிறப்புரை என, பெயர் போடப்பட்டிருந்த தஞ்சை எம்.பி.,யும், மத்திய நிதித் துறை இணை அமைச்சருமான பழனி மாணிக்கம், விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்."சதய விழாவில் பங்கேற்றால் பதவி பறிபோய் விடும்' என, அரசியல் பிரமுகர்களிடம், "நம்பிக்கை' நிலவுவதால், சதய விழாவில் தஞ்சை நகராட்சி தலைவர் சாவித்திரி, மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதா உட்பட, உள்ளூர் வி.ஐ.பி.,க்கள் கலந்து கொள்ளவில்லை என, கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல், காலை வரை தொடர்ந்து பெய்த தூறல், மழையால் நகர மக்களும் பெருமளவில் பங்கேற்கவில்லை. இதனால், சதய விழா துவக்க நிகழ்ச்சி களையிழந்து காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக