வெள்ளி, 26 அக்டோபர், 2012

நிதின் கட்கரி.. பாஜகவின் அகில இந்தியத் தலைவர்

 இந்த பால்வடியும் குழந்தை முகத்தை பாருங்கள் இது ஏதாவது தப்பு செய்திருக்குமா?  இதுதாண்டா பா ஜா கா !  
( நீதாண்டா லூசு )
நிதின் கட்கரி, கடந்த சில நாட்களில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்குப் போட்டியாக மீடியாவில் அடிபடும் பெயர், பாஜகவின் அகில இந்தியத் தலைவர். பாஜகவின் தலைவராக இவரை அறிந்தவர்களை விட, இப்போது சமூக ஆர்வலர் (?) அர்விந்த் கெஜரிவால் இவர் மீது அடுக்கியிருக்கும் குற்றச்சாட்டுகளால் இவரை அறிந்து கொண்டிருப்பவர்கள் அநேகம். இவர் மீது கேஜரிவால் வைத்திருக்கும் பிரதானக் குற்றச்சாட்டு, இவர் நிர்வாகத் தலைவராக இருக்கும் பூர்த்தி பவர் & ஷுகர் நிறுவனத்திற்கு முறைகேடாக வந்துள்ள முதலீடுகள் பற்றியது. 2001 இல் துவங்கப்பட்ட பூர்த்தி க்ரூப் நிறுவனங்களில் சுமார் பத்தாயிரம் பங்கு முதலீட்டாளர்கள். இவற்றில் 19 நிறுவன்ங்கள் பூர்த்தி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்திருப்பதன் மூலம் இயக்குனர்களாக இருக்கின்றன (Share Directors). சிக்கல் துவங்குவது இங்கிருந்துதான்; இந்த பத்தொன்பது கம்பெனிகளில் சுமார் 16 கம்பெனிகள் “ஷெல் கம்பெனிகள்” என்பது கெஜரிவாலின் குற்றச்சாட்டு; அதாவது அந்நிறுவனங்களுக்கு வேறு எவ்விதமான வர்த்தகப் பரிவர்த்தனைகளோ, நடவடிக்கைகளோ கிடையாது, பெயருக்கு ஒரு நிறுவனம், அதன் பெயரில் முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 16 நிறுவன்ங்களில் பெரும்பான்மையானவை கல்கத்தாவிலும், பம்பாயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள முகவரியில் அம்மாதிரியான நிறுவன்ங்கள் செயல்படுவதற்கான சுவடே தெரியாத வகையில், பம்பாயின் சேரிகளிலும், கல்கத்தாவின் பின்தங்கிய பகுதிகளிலும் அம்முகவரிகள் இருக்கின்றன. அம்முகவரியில் பல்லாண்டுகளாக வசிப்பவர்களுக்கு அது போன்ற ஒரு நிறுவனம் அம்முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதே புதிய தகவலாக இருக்கிறது (இவ்விவரங்கள் NDTV மற்றும் Times Of India போன்றவற்றில் வெளியாயின). தவிர இந்நிறுவன இயக்குனர்களில் கட்கரியின் கார் ஓட்டுனர் மற்றும் தனிச் செயலர் ஆகியோரும் அடங்குவர். 

கருத்துகள் இல்லை: