Viruvirupu இணையத்தளத்தில்
பாடகி சின்மயி செக்ஸ் அர்ச்சனை புகாரில், தமது பெயரும்
சேர்க்கப்பட்டுள்ளது குறித்து கோபம் கொண்டுள்ளார், நகைச்சுவை எழுத்தாளர்.
“பாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக்
கொள்ளவேண்டும், இல்லாவிடில் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும்” என்று
என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தெரிவித்துள்ளார்.
“பாடகி
சின்மயி கொடுத்துள்ள போலீஸ் புகாரில் என்னுடைய ட்விட்டர் ஐடியும் சேர்த்து
அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்து மிகுந்த மனவேதனையும் பெரும் மன உளைச்சலும்
அடைகிறேன்.கடந்த இரண்டு நாட்களாக என்னை ட்விட்டர், தனி மெயில், தொலைபேசி என்று பல விதங்களிலும் ரசிகர்களும், நல்லிதயங்களும் தொடர்பு கொண்டு தங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து வருகின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக எழுத்து, நாடகம், சினிமா என்று பல்வேறு மீடியா தளங்களிலும், சமீப காலங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வர்ச்சுவல் தளங்களிலும் நான் பிரபலமாக இருந்து வருகிறேன். கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர், ரிக்சா முன்சாமி, தமிழ்ப் புலவர் ஆதிமந்தி போன்ற நான் உருவாக்கிய கதாபாத்திரங்களும் புகழ்பெற்றவையே. இதில் குறிப்பிட்ட விபரங்கள் http://365ttt.blogspot.com/2012/10/tnfishermen-tamil-twitter-conversation.html
தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்கள், அமெரிக்க டெலிவிஷனின் ‘நீயா நானா’ ஷோக்களிலும் நான் அவ்வப்போது தலை காட்டுபவன். லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் பணி புரிபவன்” என்று தம்மைப் பற்றி கூறியுள்ள ராம், பாடகி சின்மயியின் தாயார் தமக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுகிறார்.
சின்மயி விவகாரத்தில் தமது பெயர் எப்படி வருகிறது என்று ஆச்சரியப்படுகிறார் ராம். “நான் இதுவரை சின்மயியை ட்விட்டரில் தொடர்ந்தது கிடையாது. அவர் என்னைத் தொடர்கிறாரா என்பதும் எனக்குத் தெரியாது.சில மாதங்களுக்கு முன்பு சின்மயியை கலாட்டா செய்தும் வம்புக்கு இழுத்தும் பல காரணங்களுக்காக ட்விட்டர் உலகமே அல்லோல கல்லோலப்பட்டது. அவரும் யாரையும் விடுவதாயில்லை. அவரை ‘சின்னாத்தா’ என்று பலரும் கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த நேரம் பார்த்து நான் ஒருவரை ‘ஜின்னாத்தா’ என்று கலாட்டா செய்யப்போக, சின்மயியின் அம்மா பத்மஹாசினி எனக்கு காட்டமாக ஒரு கடிதம் எழுதினார்.
அதில் என் ‘கலக்கல் கபாலி’ படத்தைப் பார்த்தாலே நான் ஒரு பேட்டை பொறுக்கி என்பது தெரிவதாகவும், தாம் உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சின்மயியை குறிவைத்து நான் எழுதியதாகவும் கடிதம் நீண்டது.
“நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் ஒரு காமெடி ரைட்டர், அந்த ’கலக்கல் கபாலி’ கார்டூன் படம் நகைச்சுவைக்காக நான் எப்போதும் பயன்படுத்துவது, அது என்னுடைய புகைப்படம் இல்லை. சரி இத்துடன் இதை முடித்துக் கொள்ளுங்கள்” என்று பதில் எழுதி மங்களம் பாடி முடித்தேன்.
தன்னைத் தொடர்பு கொள்ளச்சொல்லி அவர் சொன்னதற்கு நான் மறுப்பும் தெரிவித்திருந்தேன்.
சரியான புரிதல் இல்லாமல், என் நகைச்சுவை, கலாட்டா, கிண்டலைப் புரிந்து கொள்ளாமல் என்னை போலீஸ் புகாருக்கு உட்படுத்தி எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் என் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தரப்படும் அநாவசிய தண்டனை.
பத்திரிகையாளனான எனக்கு எதிரான இந்த வன்கொடுமை இத்துடன் நிறுத்திக் கொள்ளப்படாவிட்டால், நானும் நீதி கேட்டுப் போராட வேண்டி வரும்; மானநஷ்ட வழக்கு போடவேண்டிவரும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார், லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.
இணையத் தளங்களில் மிக பரபரப்பாக அடிபட்டுக் கொண்டுள்ள சின்மயி செக்ஸ் அர்ச்சனை விவகாரத்தில், இதுவரை சின்மயிதான் புகார் கொடுத்து வந்தார். இப்போது திடீர் திருப்பமாக, எதிர் புகாரும் வரப்போகிறது! http://365ttt.blogspot.com/2012/10/tnfishermen-tamil-twitter-conversation.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக