புதுடில்லி, அக்.22- டில்லியிலிலுள்ள,
அகில இந்திய மருத்துவ விஞ் ஞானக் கழகத்தில், தாழ்த்தப் பட்ட மற்றும்
பழங்குடியின மாண வர்களுக்கு எதிராக வேறுபாடு காட்டப்படு கிறது' என, 54
எம்.பி.கள் கோரிக்கை விடுத்துள் ளனர். டில்லி யில் அகில இந்திய மருத்துவ
விஞ் ஞானக் கழகம்(எய்ம்ஸ்) உள்ளது. இங்கு மருத்து வர்கள் மற்றும் இதர
மருத்துவ ஊழியர்கள் நியமனத்தில், இட ஒதுக் கீடு கொள்கை கடைப் பிடிக்கப்படுவ
தில்லை. குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கான இடங்கள்,
நீண்ட நாட்களாக காலி யாக உள்ளதாக புகார் கள் எழுந்தன. குறிப்பாக, எய்ம்ஸ்'
மருத்துவ மனையில், தாழ்த்தப் பட்ட மற்றும் பழங் குடியின வகுப்பு, இதர
பிற்படுத்தப்படுத்தப் பட்ட வகுப்பு மாணவர் களுக்கு எதிராக வேறு பாடு
காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது.
தேசிய அளவில், பல்கலைக்கழகங் கள், கல்வி
நிலையங்களில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத் தப்பட்ட
வகுப்பினருக்கு எதிராக வேறுபாடு காட் டப்படுகிறது: ஜாதிப் பாகுபாடு உள்ளது:
இதைத் தடுக்க வேண் டும் என, பல எம்.பி.,கள் புகார் தெரிவித்து வந் தனர்.
இத்தகைய வேறு பாடு, எய்ம்ஸ்' மருத்துவ மனை நிர்வாகத்தில் அதிக முள்ளது என,
பல்வேறு கட்சிகளை சேர்ந்த, எம்.பி.,கள் ஒன் றிணைந்து பிரத மருக்கு கடிதம்
எழுதியுள்ளனர்.
இதுகுறித்து, லோக் சபா எம்.பி., மாங்கனி லால் மண்டல் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:
இட ஒதுக்கீடு: எய்ம்ஸ்' மருத்துவ மனை
நிர்வாகத்தில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்
களுக்கு எதி ராக வேறுபாடு காட் டப்படுவது தீவிரமாக உள்ளது.
இங்கு மருத்துவர் களை நியமிக் கும்போது,
இட ஒதுக்கீட்டு கொள்கை பின்பற்றுவது இல்லை. இது தொடர் பாக, அரசு நியமித்த
குழுக்கள் அளித்த பரிந் துரைகளை யும் கடைப் பிடிப்பது இல்லை. இது தொடர்பாக,
பிரதமருக்கு நாங்கள் எழுதியுள்ள கடிதத்தில், எய்ம்ஸ் நிர்வாகத்திடம்
இருந்து, முழுமையான அறிக்கை கேட்க வலி யுறுத்தியுள்ளோம். இந்த விஷயத்தில்,
பிரதமர் தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வேண் டும். எய்ம்ஸ் துறையில்
தொடர்ந்து தாழ்த்தப் பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்து வரு கின்றனர். பழங்குடி
யின மாணவர் ஒருவர், தனக்கு ஏற்பட்ட தொடர் ஏமாற் றத்தை தாங்கி கொள்ள
முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
எய்ம்ஸ் நிர்வாகத்தில் ஜாதி பாகுபாடு காட்டப் படுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாழ்த் தப்பட் டோருக்கான தேசிய கமிஷன் நியமித்த கமிட்டி, தன் அறிக்கை யில் பரிந்துரை செய்து இருந்தது என்பது குறிப் பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக