ஞாயிறு, 21 அக்டோபர், 2012

சமூக உதவி பெறும் கருவியாக ஆதார் அட்டையை மாற்றும் திட்டம் துவங்கியது

சோனியா காந்தியுடன் மன்மோகன் சிங்
அரசின் பல்வேறு சமூகத் திட்டங்களுக்கான பயன்களைப் பெறும் ஒரு கருவியாக பல்முனை பயனளிப்பு அட்டையாகக் கருதப்படும் ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் சனிக்கிழமை துவக்கி வைத்தார்கள்.

"உதவித் திட்டங்கள் பெற ஆதார் அட்டை அவசியம் என்றானால் பலர் பாதிக்கப்படுவர்"

இந்திய மாதர் சம்மேளனப் பொதுச் செயலர் ஆனி ராஜா
"ஆதார் அட்டை அவசியம் என்றானால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்"
இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டங்களை மக்கள் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்ற நிலை வருமானால் பலர் பாதிக்கப்படுவார்கள் என இந்திய மாதர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஆனி ராஜா தெரிவிக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அதேநேரத்தில், நாடு முழுதும் 51 மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டைத் திட்டம் துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை 24 கோடி மக்கள் அதற்காகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
2014-ம் ஆண்டில் 60 கோடி மக்களுக்கு அந்த அட்டையை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம், ஓய்வூதியத் திட்டம் போன்ற பல்வேறு சமூகத் திட்டங்களை இத்துடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

"ஆதார் அட்டையால் உதவித் திட்டங்களின் பயன் அதிகரிக்கும்"

அமைச்சர் நாராயணசாமி

கருத்துகள் இல்லை: