வெள்ளி, 26 அக்டோபர், 2012

ஜெயம் ரவி கண்ணீர்! கார்த்தி: அமீர் இயக்கத்தில் இனி நடிக்க மாட்டேன்

அமீர் அண்ணனின் கழுத்தை நெரித்து... ஜெயம் ரவி கண்ணீர்!

       ஆதிபகவன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இந்த படத்தை அமீர் இயக்க ஜெயம் ரவி நடிக்கிறார் என்பதும், இந்தப்படத்தை ஜெ.அன்பழகன் தயாரிக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஜெயம் ரவி கண்கலங்கியது அனைவரையும் அதிரவைத்தது. மிகவும் சோர்வுடனும் உணர்வுபூர்வமாக பேசிய ஜெயம் ரவி, இந்தப் படத்துக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டுடேன். இரண்டு வருடங்களாக வேதனையை அனுபவித்தேன். எங்க ஷூட்டிங், எப்போ ஷூட்டிங், எந்த சீன் எடுக்கப்போறாங்க, எதுவுமே தெரியாது. ஷூட்டிங் ஸ்பாடுக்கு போன பிறகு தான் என்ன நடக்கப்போகுதுன்னு தெரியவரும். 
மிகவும் சிரமப்பட்டு பல சண்டைகாட்சிகளில் நடித்திருக்கிறேன். என் உடம்பெல்லாம் அடிபட்டது. வீட்டிற்கு போனால், என்னடா டைரக்டர் அவர் என்று அமீர் அண்ணனை திட்டுவார்கள். அமீர் அண்ணனின் கழுத்தை நெரித்து கொன்றுவிட எனக்கு பல நேரங்களில் தோன்றி இருக்கிறது. இரண்டு வருடங்களாக இந்தப் படத்தையும் முடிக்கமுடியாமல், அடுத்தப் படத்திற்கும் போக முடியாமல் அவஸ்தைப்பட்டேன். 
இதில் நிறைய லுக்ஸ் இருக்கிறது. தாடி வைத்து, தாடி இல்லாமல், மீசை வைத்து, மீசை இல்லாமல் என கெட்டப் மாற்றங்கள் அதிகம். அதை வெளியே காட்டக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

ஒருவழியாக படம் முடிந்துவிட்டது, படம் நல்லா வந்திருக்கு. இப்போது அமீர் அண்ணன் மேல எந்த கோபமும் இல்லை. அது ஏன்னு தெரியல என்று உணர்வுபூர்வமாக தன் மனதில் பட்டதை படார் என போட்டு உடைத்துவிட்டார் ஜெயம் ரவி.

கதாநாயகி நீத்து சந்திராவும் ஜெயம் ரவி பாடிய அதே சோகப் பாடலைத்தான் பாடினார். கதாநாயகனும் நாயகியும் மாறி மாறி வேதனையை சொல்ல, இருக்கிற வேதனைகளை எல்லாம் வெளியே சொல்லமுடியாமல் இருந்தார் தயாரிப்பாளர். 


இதுபற்றி அமீரிடம் கேட்டதற்கு, மனதில் பட்டதை பேசுவது நல்ல விஷயம் தானே. என்ன செய்வது, என் குணம் அப்படி. நான் அப்படித்தான் இருப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த காட்சியின் மீது மட்டும் தான் என் கவனம் இருக்கும், நான் மற்ற இயக்குனர்கள் போல கிடையாது என்று சொன்னார். 

மேலும், ஜெயம் ரவி இந்தப் படத்துக்காக யாருமே எடுக்கத் துணியாத ரிஸ்க்கை எடுத்துள்ளார். எந்த ஹீரோவும் அதுபோல காட்சிகளில் நடிப்பதற்கு முன்வர மாட்டார்கள் என்று அமீர் சொல்லும்போதே ஜெயம் ரவியின் கண்கள் கலங்கியது. ( படபிடிப்பில் நடந்த சம்பவங்கள் கண்முன் வந்ததோ என்னவோ! )

அதைவிட ஒரு பெரிய வேடிக்கையான விஷயத்தை சொன்னார் அமீர். எனக்கு இன்னும் ஒரு வருஷம் டைம் கொடுத்திருந்தா இந்த படத்தை இன்னும் நல்லா எடுத்திருப்பேன் என்பது தான் அது!   

பருத்திவீரன் படத்தை முடித்தவுடன், எவ்வளவு கோடி சம்பளம் கொடுத்தாலும் அமீர் இயக்கத்தில் இனி நடிக்க மாட்டேன் என்று கார்த்தி சொன்னது தான் நம் ஞாபகத்துக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை: