சனி, 27 அக்டோபர், 2012

கேப்டன்' கப்பலில் ஓட்டை விழுந்தது எப்படி? :பரபரப்பான பின்னணி

சொத்துக்கள் பராமரிப்பில் தகராறு ஏற்பட்டதால் ”ந்தர்ராஜனும், தன் மீதான வழக்குகள் குறித்து கட்சி தலைமை கண்டு கொள்ளாததால் தமிழழகனும்,தே.மு.தி.க., தலைமை மீது, அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக@வ, இவர்கள், முதல்வருடன் அதிரடி சந்திப்பு நடந்துள்ளதாக,தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 61; விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்; தே.மு.தி.க., துவங்கியதில் இருந்தே, அக்கட்சி பொருளாளராக இருந்து வருகிறார். விஜயகாந்தின் சினிமா, அரசியல், சொந்த விஷயங்கள், முழுவதையும் அறிந்த, வெளி நபர்களில் இவர் முக்கியமானவர்.
கேட்டு பெற்ற தொகுதி:
கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, மதுரை மத்திய தொகுதியில் ராஜன் செல்லப்பா போட்டியிடுவார் என, அ.தி.மு.க., அறிவித்தது. கூட்டணி பேச்சு வார்த்தை நடந்த நிலையில், மத்திய தொகுதியை சுந்தர்ராஜனுக்கு ஒதுக்க வேண்டும் என, விஜயகாந்த் வலியுறுத்தி பெற்று, சுந்தர்ராஜனுக்கு வழங்கினார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் மனைவி பிரேமலதா, "இத்தொகுதியில் விஜயகாந்த், நண்பர் சுந்தர்ராஜனை நிறுத்தியுள்ளார். அப்படியெனில் அவரே நிற்பதாக அர்த்தம்' எனக் குறிப்பிட்டார்.
கருத்துமோதல்:
சட்டசபை தேர்தல் முடிந்து, அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே உரசல் ஏற்பட்ட போது, சில, எம்.எல்.ஏ.,க்கள், ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்த்தால் மட்டுமே மக்கள் மத்தியில் பெயர் எடுக்க முடியும், என கருத்து தெரிவித்தனர்.ஆனால், "கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்றுள்ளோம்; அடுத்த தேர்தலுக்கு, ஓராண்டு முன்பிலிருந்து, எதிர்ப்பு நிலையை எடுக்கலாம். அப்போது தான் தொகுதியில், மக்கள் திட்டங்களை நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்' என, சுந்தர்ராஜன் தரப்பில் கருத்து தெரிவிக்கப் பட்டது.
அழையா விருந்தாளி:
இதற்கு, மற்ற நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க, கட்சி தலைமையும் இவர் மீது அதிருப்தியுற்றது. தென் மாவட்டங்களில், விஜயகாந்த் சமீபத்தில், சுற்றுப் பயணம் செய்த@பாது, ”ந்தர்ராஜன் உடன் செல்லவில்லை. மதுரையில், ஆக., 25ல் நடந்த கூட்டத்தில் மட்டும், "அழையா விருந்தாளி'யாக அவர் பங்@கற்றுள்ளார்.காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூர், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட இடங்களில், தே.மு.தி.க., முக்கியப் புள்ளியின் சொத்துக்களை, இவர் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.
சொத்து பறிமாற்றம்:
இவரை அழைத்த, தே.மு.தி.க., முக்கியப் புள்ளி, சொத்துக்களை மாற்றிக் எழுதி கொடுக்கும்படி கட்டளையிட்டுள்ளது. தன் மீது நம்பிக்கையில்லாமல், நடந்து கொண்டதால், எதிர்ப்பு தெரிவித்த அவர், கட்சி நடவடிக்கைகளில் பங்@கற்காமல் தவிர்க்கத் துவங்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் மூலமாக, அழுத்தம் கொடுத்து, ”ந்தர்ராஜன் பெயரில் இருந்த சொத்துக்களை, இதர நிர்வாகிகள் பெயரில் மாற்றி, பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, கட்சி அலுவலகத்திற்கு வருவதையும், கட்சி நிகழ்ச்சிகளில் பங்@கற்பதையும் அவர் குறைத்துக் கொண்டுள்ளார்.
குட்டி "கேப்டன்' :
கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த பெண்ணாடத்தை சேர்ந்தவர் தமிழழகன், 44. கடந்த, 1987ம் ஆண்டு முதல், விஜயகாந்தின் தீவிர ரசிகராகவும், கேப்டன் மன்ற நிர்வாகியாகவும் இருந்தவர். திட்டக்குடி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வான தமிழழகன், விஜயகாந்தை போலவே, தலைமுடி அலங்காரம், செய்வதால், "குட்டிகேப்டன்' என கட்சியினரால் அழைக்கப்பட்டவர். கடந்த ஜூன் மாதம், தமிழழகனின், 17 வயது மகன், அடுத்தவர் தோட்டத்தில், மரவள்ளி கிழங்கு பறித்து தின்றது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால், பெண்ணாடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வழக்கு பதிவு :
போலீஸ் நிலையத்திற்கு சென்ற தமிழழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், போலீசாரை மிரட்டி விட்டு, மகனை மீட்டுச் சென்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, பெண், எஸ்.ஐ., கொடுத்த புகாரின் பேரில், தமிழழகன் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒரு மாதம் தலைமறைவாக இருந்த தமிழழகன், கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றார். இதேபோல, விவசாயி ஒருவர், தமிழழகன் மீது, எஸ்.பி.,யிடம், நில அபகரிப்பு புகார் கொடுத்தார்.
கண்டிக்கவில்லை:

இந்த இரு பிரச்னையிலும், தே.மு.தி.க., தலைமை, தமிழழகனுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட கொடுக்கவில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.அதே நேரத்தில், நில அபகரிப்பு புகாரில் சிக்கி கைதான, திருத்தணி, எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியத்திற்கு ஆதரவாக, குரல் கொடுத்ததுடன், மாநில நிர்வாகிகளை, புழல் சிறைக்கு அனுப்பி, கட்சி தலைமை அவரை சந்திக்க வைத்தது. இதுபோன்று பாகுபாடு காட்டியதால், தமிழழகன் அதிருப்தி அடைந்ததாக கூறுகிறதுதே.மு.தி.க., வட்டாரம்.

- நமது நிருபர் - dinamala.com

கருத்துகள் இல்லை: