பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பாலினம் (Gender) என்பது வேறு, பாலியல் -ஒருங்கினைவு (Sexual Orientation) என்பது வேறு. பொதுவாக, மக்களிடம் ஆண், பெண் பற்றிய விழிப்புணர்வே மேலோங்கி நிற்கிறது. சமீபகாலமாகத்தான் திருநங்கைகளமீது வெளிச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது.
என்னென்ன பாலினங்கள் இருக்கின்றன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.
பொதுப் பாலினம்
- ஆண்- Male
- பெண்- Female
- திருநங்கை – Transwomen
- திருநம்பி- Transmen
- பால் நடுநர் – Androgyny
- முழுனர் – pangender
- இருனர்- Bigender
- திரினர்- Trigender
- பாலிலி – Agender
- திருனடுனர் – Neutrois
- மறுமாறிகள் – Retransitioners
- தோற்ற பாலினத்தவர் – Appearance gendered
- முரண் திருநர் – Transbinary
- பிறர்பால் உடையணியும் திருநர் – Transcrossdressers
- இருமை நகர்வு – Binary’s butch
- எதிர் பாலிலி – Fancy
- இருமைக்குரியோர் – Epicene
- இடைபாலினம் – Intergender
- மாறுபக்க ஆணியல் – Transmasculine
- மாறுபக்க பெண்ணியல் – Transfeminine
- அரைபெண்டிர் – Demi girl
- அரையாடவர் – Demi guy
- நம்பி ஈர்ப்பனள் – Girl fags
- நங்கை ஈர்பனன் – Guy dykes
- பால் நகர்வோர் – Genderfluid
- ஆணியல் பெண் – Tomboy
- பெண்ணன் – Sissy
- இருமையின்மை ஆணியல் – Non binary Butch
- இருமையின்மை பெண்ணியல் – Non binary femme
- பிறர்பால் உடை அணிபவர் – Cross Dresser
எதற்காக இப்போது இவர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும்? ஏனென்றால் நாம் வாழும் சமூகத்தில்தான் இவர்களும் வாழ்கிறார்கள். இவர்களையும் ஒன்றிணைந்துதான் சமுதாயம் இயங்குகிறது. சமுதாய மாற்றங்களுக்கு இவர்களும் பங்களிக்கிறார்கள். இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை வரலாற்றில் இருந்து அளிக்கமுடியும்.
0
ஆழம் இதழில் வெளியான கோபி ஷங்கரின் கட்டுரைகள் :
‘ஸ்ருஷ்டி’ என்னும் அமைப்பின் நிறுவனர் கோபி ஷங்கர். மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டம், ஸ்ருஷ்டி. பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்னைகளை, சமூகப் பார்வையோடு அணுகி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம். http://www.tamilpaper.net/?p=7018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக