செவ்வாய், 23 அக்டோபர், 2012

அதிகாரிகள் தீபாவளி வசூல் வேட்டை Start...வர்த்தகர்கள் கலக்கம்

தீபாவளி பண்டிகைக்கு, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், போலீஸ், தீ அணைப்பு துறை, வணிகவரித்துறை என, அரசுத்துறை அதிகாரிகள் நோட்டுடன், தீபாவளி வசூலுக்கு களம் இறங்கி உள்ளது, வர்த்தகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு, ஒரு மாதத்துக்கு முன்னரே அரசுத்துறை அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைக்கு முன்பாகவே போலீஸார், ஸ்டேஷன்களில் பூஜை செலவினத்துக்காக வசூலில் களம் கண்டனர்.பூஜை செலவுக்கான வசூல் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், தீபாவளி வசூலை துவக்கி உள்ளனர். இதே போல் தீ அணைப்பு வீரர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், வணிகவரித்துறை அலுவலர்கள் ஆகியோர் தற்போது நோட்டுடன் வசூல் வேட்டையில் களம் இறங்கி உள்ளனர்.


சிலர் அலுவலகத்திலேயே நோட்டுக்களை வைத்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் வணிக வரித்துறையை சேர்ந்தவர்கள், முக்கிய வணிக நிறுவனங்கள், வர்த்தகர்களிடம் நேரடியாக களம் இறங்கி கடந்த ஆண்டு வசூல் செய்த தொகையை காட்டி அதே தொகையையும், அதற்கு மேலான தொகையை நோட்டில் குறிப்பிடக் கோரி, அதை பெற்று வருகின்றனர்.ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேல் அதிகாரிகள் கடை ஒன்றுக்கு, 500 ரூபாயை தர வேண்டும் என, நிர்ப்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே போல் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், வணிக நிறுவனங்களை நடத்துபவர்களிடம் இருந்து குறைந்த பட்சம், 1,000 ரூபாய் முதல், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை, நிர்ணயித்து வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இவற்றுக்கு எல்லாம் மேலாக சில குறிப்பிட்ட அதிகாரிகள் பணம் பெறுவதை தவிர்த்து பட்டாசு, புத்தாடை, பலகாரம் என, பொருட்கள் வசூலிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் தீபாவளி வசூல் வேட்டை கனஜோராக அரங்கேறி வருகிறது.வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களின் மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், வசூல் வேட்டையில் தீவிரம் வருகின்றனர். மாநகரில் லாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்களின் பட்டியலை கையில் வைத்துள்ள இவர்கள், பஸ்களின், லாரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பஸ் ஒன்றுக்கு, 750 ரூபாயும், லாரிக்கு, 500 ரூபாய் நிர்ணயித்து வேட்டை நடத்தி வருகின்றனர்.

அரசுத்துறை அதிகாரிகள் வசூல் வேட்டையில் களம் இறங்கி விட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளதால், இன்னும் சில தினங்களில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் சிக்குவர் என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நமது நிருப

கருத்துகள் இல்லை: