புதன், 24 அக்டோபர், 2012

உலக அளவில் பிசினெஸ் இலங்கை 81. பாகிஸ்தான் 107. பங்களாதேஷ் 129,இந்தியா 132

உலக அளவில், பிசினெஸ் செய்வதற்கு இந்தியா 132-வது இடத்தில்! இலங்கை 81, பாகிஸ்தான் 107,  பங்களாதேஷ் 129

Viruvirupu
இன்னும் சீக்கிரம் பண்ண முடியாதுங்களா?
வணிகம் செய்வதற்கு உகந்த சூழ்நிலை உள்ள 185 நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா 132-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சிங்கப்பூர் உள்ளது.
ஒருகாலத்தில் வணிகம் செய்வதற்கு மிகவும் சிரமமான நாடாக இந்தியா இருந்த நிலைமை, 7 ஆண்டுகளுக்கு முன்புதான் மாறியது. 2005-ம் ஆண்டு முதல் வணிகம் செய்வதற்கு தேவையான ஒப்புதல் முறைகளை இந்தியா எளிமையாக்கியுள்ளது. அத்துடன், வணிகம் செய்வதற்கான செலவையும் இந்தியா குறைத்துள்ளது என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
BRIC எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா (BRAZIL, RUSSIA, INDIA, CHINA) நாடுகளை பொறுத்தவரை, 2005-ம் ஆண்டு முதல் வணிகத்துக்கு ஏதுவான சூழ்நிலை உருவாக்குவதில் முதல் 50 இடங்களில், இந்தியாவும், சீனாவும் இடம் பெற்றுள்ளன. கவனிக்கவும், இங்கு குறிப்பிடப்படுவது, புதிய பிசினெஸ் ஒன்றை தொடங்குவதற்கு எடுக்கப்படும் அவகாசம்.
ஒரு புதிய பிசினெஸ் தொடங்குவதற்கு, இந்தியாவில் 27 நாட்களாவது தேவை. சீனாவில் 33 நாட்கள் ஆகின்றன என உலக வங்கி அறிக்கை கூறுகிறது. மேலும் புதிய பிசினெஸூக்கு மின்சார வசதி பெறுவதற்கு இந்தியாவில் 67 நாட்கள் ஆகிறது என்றும், இந்த பிரிவில், இந்தியா 105-வது இடத்தை பிடிக்கிறது என்றும் இந்த உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

கருத்துகள் இல்லை: