சனி, 27 அக்டோபர், 2012

விஜயகாந்த: நாய்..நாய்..மைக்கைத் தூக்கிட்டு வந்துறீங்க.. அடிச்சுருவேன் பத்திரிகையாளர்களை கேவலமாக

 Vijayakanth Slam Media சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பத்திரிகையாளர்களை சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துவிட்டார் அக்கட்சி தலைவர் விஜயகாந்த். விஜயகாந்த் உடன் வந்த தேமுதிக எம்.எல்.ஏ. தாக்கியதில் மூத்த பத்திரிகையாளர் பாலு காயமடைந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜனும் தமிழ் அழகனும் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து தேமுதிகவில் பிளவு வெளிப்படையாக வெடித்தது.
இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் மதுரை செல்வதற்காக வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் மூத்த பத்திரிகையாளர் பாலு கேள்வி எழுப்ப சட்டென கோபமடைந்து ‘போய்யா..போய்.ய்யா' என்று கடுப்பாக மிரட்டினார்.
ஜெயலலிதாவிடம் கேளுங்க...

பின்னர் மைக்குகளை நீட்டிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் வந்த அவர், நாட்டுல எவ்ளோ பிரச்சனை.. மின்வெட்டை பத்தி பேசலாம்.. டெங்குவை பத்தி பேசலாம்.அதைவிட்டுவிட்டு.." என்று கூறிக் கொண்டிருந்தவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர் பத்திரிகையாளர்கள். இதில் ஆவேசமடைந்த விஜயகாந்த், போய் ஜெயலலிதாவை கேளுய்யா.. போய் அங்கெல்லாம் கேளுய்யா" என்று ஆக்ரோஷமாக கூறியதுடன் "அடிச்சிருவேன்" என்றும் கையை ஓங்கியபடி நிலையத்துக்குள் நுழைய முயன்றார்.
நாய்...நாய்..
அப்போது முதலில் விஜயகாந்த் கோபமாக பேசிய பத்திரிகையாளர் பாலு மீண்டும் கேள்வி எழுப்ப., நாய்.. நாய்களா... வந்துட்டாங்க..உங்க கம்பெனியா சம்பளம் கொடுக்குது.. பேட்டி கொடுக்க... என்று ஆவேசமாகக் கூறியபடியே சென்றார். அப்போது செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. முருகேசன் அந்த பத்திரிகையாளரைத் தடுக்க அவர் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசில் புகார்
பத்திரிகையாளர் பாலு சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் தம்மை தாக்கிய தேமுதிக எம்.எல்.ஏ. முருகேசன் மீது நடவடிக்காகை எடுக்கக் கோரி புகார் கொடுத்திருக்கிறார். http://tamil.oneindia.in/

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமி்ழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கு. அதையெல்லாம் விட்டுவிட்டு உங்க எம்எல்ஏ அவரை சந்தித்தார். இவரை ஏன் சந்தித்தார் என்ற கேள்வி நாட்டிற்கு தேவையா?
புறநகர் பகுதிகளில் சாலை அமைப்பது,
புறநகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைப்பது,
மக்கள் நலப்பணிகளை நிறைவேற்றுவது குறித்த பல மக்கள் பிரச்சனைகள் உள்ளன, அதையெல்லாம் பேசலாமே.

வெற்றித்திருமகன் சொன்னது…

தமிழ் நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கு முதலமைச்சரை யாரும் இந்த மாதிரியெல்லாம் பத்திரிகைகாரங்க கேட்கமாட்டெராங்களே அது ஏன்?