டெல்லியில் அரசு சார்பில் கலாவதி சரண் மருத்துவமனை நடத்தப்படுகிறது. இந்த
மருத்துவமனையில் குழந்தைகள் சாவு குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் கீழ் கேட்டு ராஜ்ஹன்ஸ் பன்சால் என்பவர் மருத்துவமனை
நிர்வாகத்துக்கு மனு தாக்கல் செய்தார். மனுவுக்கு மருத்துவமனை நிர்வாகம்
அனுப்பியுள்ள பதிலில், ‘கலாவதி சரண் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில்
10.081 குழந்தைகள் இறந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை 943 குழந்தைகள்
இறந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.இதுபற்றி மருத்துவமனை
நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘பெரும்பாலான குழந்தைகள், உயிருக்கு மிகவும்
ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், இயற்கை
சுவாச கருவி சரியாக செயல்படாததால் எந்த குழந்தையும் இறக்கவில்லை’ என்றனர்.
இது தொடர்பாக தேசிய மனித உரிமை கமிஷனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக