செவ்வாய், 23 அக்டோபர், 2012

சரத்பவார்: மனோதிடத்தால் புற்றுநோயை வென்றேன்

 மனோ திடத்தால் புற்றுநோயை வென்றேன் என்று மத்திய அமைச்சர் சரத்பவார் கூறி னார். தேசியவாத காங்கிர சின் மகாராஷ்டிரா மாநில கிளையின் மாநாடு புனே யில் நேற்று தொடங் கியது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைவரும் மத் திய அமைச்சருமான சரத் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது, புற்றுநோயில் இருந்து தப்பியது எப்படி என்பது பற்றி அவர் கூறியதாவது:
சுமார் 10 ஆண்டுக்கு முன் எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. என்னை பார்க்க வந்திருந்த டாக்டர் ஒருவர், கன்னத்தில் வீக்கம் இருப் பதை கண்டுபிடித்து பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான் என் வாயில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சிகிச்சை தொடங்கியது. பினனர் ஆபரேஷன் செய்தார்கள். இந்த காலகட்டத்தில் என்னால் உணவு கூட சாப்பிட முடியாது.
ஆபரேஷன் செய்த ஒரு மாதத்தில் மத்திய அமைச்சராக பதவி ஏற்றேன். வலியோடு பணிகளை செய்தேன். என்னிடம் அதிக கேள்விகள் கேட்காமல் எம்.பி.கள் உதவிசெய்தார்கள்.
என்னுடைய வலிமையான மனோதிடம் காரண மாக புற்றுநோயை வென்றேன். என் மனோதிடத்துக்கு என் தாய்தான் காரணம். அவர், பல எதிர்ப்புகளை தாண்டி வெற்றிகரமான பெண்ணாக திகழ்ந்தார். மனோதிடத்தை நான் இழந்து இருந்தால் நோய் குணமாகாமல் அப்போதே இறந்திருப்பேன். என் மனைவி மற்றும் மகளும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். இவ்வாறு சரத்பவார் கூறினார்

கருத்துகள் இல்லை: