சென்னை மருத்துவமனையில் ஆண் குழந்தையை திருடிய டாக்டரும், நர்சும்
Viruvirupu
இது பற்றி கேட்டதற்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டரும், நர்சும் 2 ஆண்குழந்தைகள் பிறக்கவில்லை என்றும், ஒரு ஆண் குழந்தைதான் பிறந்தது என்றும், சொன்னார்கள். அதை ஏற்க மறுத்து சண்டை போட்ட தாயிடம், ஒரு குழந்தையை வாங்கிக் கொண்டு போகாவிட்டால் விஷ ஊசி போட்டு உன்னை கொன்றுவிடுவோம்” என்று மிரட்டினார்கள் என புகார் கூறப்பட்டுள்ளது.
சென்னை புது வண்ணாரப்பேட்டை, தேசிகா நகரை சேர்ந்த பிரவீன்குமார், மேனகா தம்பதி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து இந்த புகாரை அளித்தனர்.
மேனகா கொடுத்துள்ள புகாரில், “நான் கர்ப்பம் தரித்தவுடன், ராயபுரம் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்தேன். அப்போது வயிற்றில் 2 குழந்தைகள் இருப்பதாக கூறினார்கள். பிரசவம் ஆனபோதும், பிரசவம் பார்த்த பெண் டாக்டரும், நர்சுகளும் எனக்கு 2 ஆண்குழந்தைகள் பிறந்துள்ளதாக சொல்லி, 2 ஆண் குழந்தைகளையும் என்னிடம் தூக்கி காண்பித்தார்கள். அதன் பிறகு 2 ஆண் குழந்தைகளும் எடை குறைவாக இருப்பதாக கூறி, இன்குபேட்டரில் வைத்தனர்.
சுகப்பிரசவம் நடந்தால் வழமையாக 2 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள். ஆனால் என்னை 8 நாட்கள் கழித்துதான் தன்னை டிஸ்சார்ஜ் செய்தனர்.
டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பே எனக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டரும், நர்சும் எனக்கு 2 ஆண்குழந்தைகள் பிறக்கவில்லை என்றும், ஒரு ஆண் குழந்தைதான் பிறந்தது என்றும், சொன்னார்கள். நான் அதை ஏற்க மறுத்து சண்டை போட்டேன். ஒரு குழந்தையை வாங்கிக் கொண்டு போகாவிட்டால் விஷ ஊசி போட்டு உன்னை கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள்.
பயந்து போன என்னால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை. எனது கணவர் மற்றும் தாயாரையும் மிரட்டி விட்டனர். இப்போது மற்றொரு டாக்டர் கொடுத்த தைரியத்தில்தான் புகார் கொடுத்துள்ளேன். எனது இன்னொரு குழந்தையை திருடி விற்றுவிட்டார்கள் என்று கருதுகிறேன். இரு குழந்தைகள் இருந்ததற்கான ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளது. குழந்தை திருட்டுக்கு காரணமாக இருந்த ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை டாக்டர் மற்றும் நர்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். (RSRM – Raja Sir Ramasamy Mudaliyar maternity hospital) மருத்துவமனை, அரசு ஸ்டேன்லி மெடிகல் காலேஜூடன் இணைந்து செயற்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக