புதன், 24 அக்டோபர், 2012

மக்கள் வரிப்பணத்தை வீணடித்த ராணுவ தளபதிகள்; அறிக்கை

புதுடில்லி: இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் மக்கள் வரிப்பணம் சுமார் 100 கோடி ரூபாய் வீணடித்துள்ளதாக தற்போதைய தளபதி, முன்னாள் தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகள் மீது ராணுவ தணிக்கை குழு அறி்க்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
100கோடி இழப்பு :
தற்போதைய ராணுவ தளபதி பிக்ராம்சிங் மற்றும், முன்னாள் தளபதி வி.கே.சிங்.,மற்றும் ராணுவ அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 100கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ராணுவ தணி்க்கை அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இழப்புகள் அனைத்தும் வெளிநாட்டு கருவிகளை ‌கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
வெளிநாட்டு கருவிகள்:
ராணுவத்திற்கு தேவையான கருவிகளை கொள்முதல் செய்வதில் சீன தயாரிப்புகளே முக்கிய இடம் பிடித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான தயாரிப்புகள் தரம் குறைந்தவையாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப் பட்ட கருவிகள் என கூறப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் மிக அதிக விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த கருவிகள் இந்திய சந்தையி்ல் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்திருக்கலாம் என தணிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக உயர்தர பைனாகுலர்களை இந்திய இடைத்தரகர்கள் மூலம் கிழக்கு பிராந்திய பிரிவினர் ‌கொள்முதல் செய்துள்ளனர். அதே தரத்தில் இந்திய தயாரிப்பு கருவிகள் குறைந்த விலையில் விற்பனைக்கு இருந்துள்ள போதிலும் அவைகள‌ை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது..

மற்றொரு உதாரணமாக ராணுவ தலைமையகம் ஒதுக்கிய புல்லட் புருப் ஜாக்கெட்டுகளை வடக்கு பிராந்திய ராணுவத்தினர் கொள்முதல் செய்துள்ளனர். இதன்மூலம் பிராந்தியங்களுடையே முறையான தகவல் பரிமாற்‌றத்திலும் குளறுபடி காணப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2009-10 மற்றும் 2010-2011 ஆகிய இரணடு ஆண்டுகளில் மட்டும் சுமார் 103.55 கோடி அளவிற்கு இழப்புஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தணிக்கை குழு அறிக்கை:

ராணுவத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ள கருவி்கள் அனைத்தும் சிறப்பு நிதிதிட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த நிதியின் மூலம் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை கொள்முதல் செய்வது என்பது குறித்து உத்தரவிடமுடியாது என்ற போதிலும் இரண்டு ராணுவ அதிகாரிகளின் மீது முழு விசாரணை நடத்த வேண்டும் என குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: