வெள்ளி, 26 அக்டோபர், 2012

வதேரா நிலம் வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா, நிலங்கள் வாங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று விசாரணை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நம்பிட்டோம் நம்பிட்டோம் நல்லாவே நம்பிட்டோம்  சோனியா மருமகன் ராபர்ட் வதேரா அரியானா மாநிலத்தில் குர்கான், பரிதாபாத், பல்பால் மற்றும் மேவாத் நகரில் ஏக்கர் கணக்கில் நிலங்கள் வாங்கி குவித்திருப்பதாகவும், சந்தை மதிப்பை விட குறைந்த மதிப்பில் இவற்றை பதிவு செய்திருப்பதாகவும் சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதற்கிடையில் அரியானா மாநிலத்தில் நில பத்திர பதிவு துறை இயக்குநராக இருந்த அசோக் கெம்கா என்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி, 2005ம் ஆண்டு முதல்  ராபர்ட் வதேரா வாங்கிய மற்றும் விற்பனை செய்த நிலங்கள் குறித்து விசாரணை நடத்த குர்கான், பரிதாபாத், பல்வால் மற்றும் மேவாத் நகர துணை  கமிஷனர்களுக்கு கடந்த 12ம் தேதி உத்தரவிட்டார்.

கடந்த இரண்டு வாரமாக தீவிர விசாரணை நடத்திய குர்கான் மற்றும் இதர நகர துணை கமிஷனர்கள் வதேரா நிலம் வாங்கியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என அரசுக்கு நேற்று அறிக்கை கொடுத்தனர். வதேரா வாங்கிய நிலம் அனைத்தும் அப்போது நடைமுறையில் இருந்த வழிகாட்டி மதிப்பை காட்டிலும் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும், உரிய தொகைக்கு பத்திரம் வாங்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: