புதுடெல்லி:
ராவல் பரேஷ், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்த இந்திப் படம் ‘ஓ மை
காட்’. உமேஷ் சுக்லா இயக்கிய இந்தப் படம் சமீபத்தில் வட மாநிலங்களில்
வெளியாகி உள்ளது.
படத்தில் நடித்த ராவல், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பட
இயக்குனர் உமேஷ் சுக்லா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி
மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிவசேனா இந்துஸ்தான் அமைப்பின்
தேசிய பொதுச் செயலாளர் ராஜேந்தர்சிங் ராஜா மனு தாக்கல் செய்துள்ளார். அதில்
அவர் கூறியிருப்பதாவது:‘ஓ மை காட்’ படம் இந்துக்களின் மனதை புண்படுத்தும்
விதத்தில் இருக்கிறது. அதில் நடித்துள்ள ராவல் பேசும் வசனங்கள்
இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. இந்து மத
கடவுள்கள் மற்றும் தேவதைகளை அவமதிக்கும் விதத்தில் பல காட்சிகள் இடம்
பெற்றுள்ளன. இந்து கடவுள்களையும் தேவதைகளையும் இழிவுபடுத்தும் வசனங்களை
ராவல், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் பேசி நடித்துள்ளனர்.இதில் ஆச்சரியம் என்ன வென்றால் இந்துக்க ளின் மனதை காயப்படுத் தும் இந்த படத்துக்கு மத்திய தணிக்கை குழுவினர் அனுமதி அளித்ததுதான்.இதன்மூலம் மத்திய தணிக்கை குழு சட்ட விரோதமாக பொறுப்பற்ற முறையில் இப்படத்துக்கு அனுமதி வழங்கி இருப்பது தெளிவாகிறது. ஆகையால் இந்த படத்தின் இயக்குனர், நடிகர்கள் ராவல் பரேஷ் மற்றும் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் மீது நடவடி க்கை எடுக்கும்படி டெல்லி போலீசில் மனு கொடுத்தேன். ஆனால் நான் கொடு த்த மனு மீது இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே இந்துக் கடவுள்கள், தேவதைகளை இழிவுபடுத்தும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ராவல் பரேஷ், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பட இயக்குனர் உமேஷ் சுக்லா ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி போலீ சாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் ராஜேந்தர்சிங் ராஜா கூறியுள்ளார். மனுவை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் மயூரி சிங் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்து, விசாரணை அறிக்கையை நவம்பர் 27ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் படி நந்த்நகரி போலீசாருக்கு உத்தரவிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக