நித்தியானந்தன் உங்கள் தோழன் : JVP கலவரம்: மலையகத்தின் மறக்க முடியாத கருப்பு வரலாறு!
1987-1989
JVP கலவரத்தை பார்க்கும் முன் இன்றைய விமர்சனம் பற்றிய சிறிய பதிவை பார்த்துவிட்டு செல்வோம்...
இன்று JVP பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு மலையகத்தின் எதிர்காலம் பற்றி பேசுகிறது. தொண்டமான் தலைமையிலான *இ.தொ.கா* வை விமர்சிக்கிறது.
ஆனால் 1987-1989ல் ஒரு முழு சமூகத்தின் எழுச்சியை ஆயுதம் ஏந்தி நாசமாக்கியது யார்?
தேயிலை தொழிற்சாலைகளை எரித்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பசியிலும் பயத்திலும் தள்ளியது யார்?
ஒரு பக்கம் நாசம். மறுபக்கம் *அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்* அவர்கள் உருவாக்கிய *இ.தொ.கா* மலையக மக்களுக்கு கல்வி, வீடு, குடியுரிமை, அரசியல் அங்கீகாரம் என ஒரு சமூகத்திற்கே விடிவை தந்தது.
நேற்று எங்கள் வாழ்வை குழிதோண்டி புதைத்தவர்கள், இன்று எங்கள் தலைமையை பார்து குறை சொல்கிறார்கள்.
மலையகத்தை பற்றி பேச JVP-யின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
எந்த தகுதியும் இல்லை.
இரத்தத்தில் எழுதப்பட்ட வரலாற்றை மறந்துவிட்டு பேச வராதீர்கள்.
JVP கலவரம் மலையகத்தின் தேயிலை கட்டமைப்பை மட்டும் நாசமாக்கவில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உடைத்தது. பசி, பயம், வறுமை என 3 வருடங்கள் மலையகம் நரகமாக மாறியது.
அன்று அந்த வெறியாட்டம் நடக்காமல் இருந்திருந்தால், இன்று மலையகம் இன்னும் பல படிகள் முன்னேறி இருக்கும்.
இது மறக்க முடியாத, மன்னிக்க முடியாத ஒரு கருப்பு அத்தியாயம்.
இலங்கையின் வரலாற்றில் 1987 முதல் 1989 வரை நடந்த JVP கிளர்ச்சி ஒரு இரத்தக்களரியாக பதியப்பட்டுள்ளது. ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்திற்கு எதிராக ஆரம்பித்து, ரணசிங்க பிரேமதாச ஆட்சியிலும் தொடர்ந்த இந்த ஆயுதப் போராட்டம் நாட்டின் பொருளாதாரத்தையும், சமூக கட்டமைப்பையும் உலுக்கியது.
1. கலவரத்திற்கான முக்கிய காரணங்கள்
1.இலங்கை - இந்திய ஒப்பந்தம் மற்றும் இந்திய அமைதிப்படையின் வருகை
2. 13ஆம் திருத்தம் மூலம் மாகாண சபை முறை வந்ததற்கான எதிர்ப்பு
3. கிராமப்புற இளைஞர்களின் வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி
4. JVP மீதான அரச தடை
JVP-யின் நோக்கம்
UNP அரசாங்கத்தை ஆயுத முனையில் வீழ்தி, இலங்கையில் மார்க்சிச-லெனினிச சோசலிச ஆட்சியை நிறுவது. அதற்காக நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக முடக்க திட்டமிட்டனர்.
*மலையகத்தின் கருப்பு வரலாறு*
நாட்டின் பொருளாதார முதுகெலும்பான தேயிலைத் துறையை குறிவைத்தனர்.
"வேலைநிறுத்தம் செய்யுங்கள்" என தோட்ட தொழிலாளர்களை கட்டாயப்படுத்தினர். ஆனால் கடும் வறுமையில் இருந்த மலையக மக்கள் வயிற்றுப் பசிக்காக வேலைக்கு சென்றனர்.
இதை பொறுக்க முடியாத JVP, மலையகத்தை இலக்கு வைத்தது. இது வெறும் பொருளாதார தாக்குதல் மட்டுமல்ல. (இந்தியாவின் ஐந்தாம் படை)என்ற பெயரில் மலையக இந்திய வம்சாவளி தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவாத தாக்குதலாகவும் அமைந்தது.
3. தொழிலாளர்கள் எதிர்கொண்ட மோசமான நிலை மற்றும் பாதிப்புகள்*
JVP கலவரம் மலையக தொழிலாளர்களை இரண்டு பக்கமும் இருந்து நசுக்கியது.
1.வேலைநிறுத்த அச்சுறுத்தல்- வேலைக்கு போனால் கொல்லப்படுவீர்கள் என துண்டுப்பிரசுரம் மற்றும் நேரடி அச்சுறுத்தல். இரவில் தோட்டத்திற்குள் வந்து கூட்டம் நடத்தி மிரட்டினர்.
2.வருமான இழப்பு - வேலைக்கு போகாதவர்களுக்கு அன்றாட கூலி இல்லை. ஏற்கனவே வறுமையில் இருந்த குடும்பங்கள் பசியால் வாடினர். அரிசி, பருப்பு வாங்க கூட காசு இல்லாத நிலை.
3.குடியிருப்பு தாக்குதல் -வேலைக்கு சென்ற தொழிலாளர்களினன் லயன் குடியிருப்புகள் உடைக்கப்பட்டன. பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. பெண்கள், குழந்தைகள் பயத்தில் இரவு முழுக்க தூங்க முடியவில்லை.
4.போக்குவரத்து முடக்கம் -பஸ்கள் எரிக்கப்பட்டதால் தோட்டத்தில் இருந்து வைத்தியசாலை, சந்தைக்கு கூட போக முடியாத நிலை. கர்ப்பிணிகள், நோயாளிகள் கூட வழியின்றி தவித்தனர்.
5.பிள்ளைகளின் கல்வி பாதிப்பு- பாடசாலைகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் வர முடியவில்லை. ஒரு தலைமுறையின் படிப்பு பாதிக்கப்பட்டது.
6.உளவியல் பயம்- "நாளை நம்ம வீடு எரியுமா?" என்ற பயத்துடனே மக்கள் வாழ்ந்தனர். பலர் தோட்டத்தை விட்டே வெளியேறினர்.
ஒரு பக்கம் வயிறு, மறுபக்கம் உயிர். இந்த இரண்டிற்கும் நடுவில் மாட்டிக்கொண்டு மலையக தொழிலாளி அன்று அல்லல்பட்டார்.
*4. நாசமாக்கப்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் - 1987-1989*
மொத்தம் *75 தொழிற்சாலைகள்* தாக்கப்பட்டன. இதில் *21 தொழிற்சாலைகள் முற்றாக அழிக்கப்பட்டன.*
- *பாராங்கலை தொழிற்சாலை* - கேகாலை
- *ரோஹிலா தொழிற்சாலை* - நுவரெலியா
- *மஸ்கெலியா, உபகொட பகுதி ஆலைகள்*
- *இரத்தினபுரி, பலாங்கொடை அரச ஆலைகள்*
- *ஹொரண தேயிலை & ரப்பர் தொழிற்சாலை*
- *காலி, மாத்தறை சிறு தேயிலை ஆலைகள்*
இத்துடன் JEDB/SPC அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. மலையக பஸ்கள் பெருமளவில் எரிக்கப்பட்டன.
*5. கொல்லப்பட்டவர்கள்*
- *லியன பத்திரண* - JEDB கார்பரேட் பணிப்பாளர்
- *டி. சி. அதுகோரல* - தோட்ட பொறியலாளர்
- *10-க்கும் மேற்பட்ட தோட்ட உதவி அதிகாரிகள்* - நுவரெலியா, பதுளை, மாத்தளை
- *கே. குணரத்தினம்* - பிரபல தொழிலதிபர்
- *சண்முகம் சகோதரர்கள்* - மலையக வர்த்தகர்கள்
- *சபீர் ஹுசைன்* - முஸ்லிம் வர்த்தகர்
- பல வெளிநாட்டு நிபுணர்கள்
JVP கலவரம் மலையகத்தின் தேயிலை கட்டமைப்பை மட்டும் நாசமாக்கவில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உடைத்தது. பசி, பயம், வறுமை என 3 வருடங்கள் மலையகம் நரகமாக மாறியது.
அன்று அந்த வெறியாட்டம் நடக்காமல் இருந்திருந்தால், இன்று மலையகம் இன்னும் பல படிகள் முன்னேறி இருக்கும்.
இது மறக்க முடியாத, மன்னிக்க முடியாத ஒரு கருப்பு அத்தியாயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக