திருமதி ஒய்.ஜி.பி.யால் நிறுவப்பட்ட ‘செல்வாக்கு’ பள்ளியில் நீச்சல் குள மரணம்! சமசீர் கல்வியை ஒழித்துகட்ட அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த இந்த திருமதி YGP நடிகர் ரஜினியின் மனைவி லதாவுக்கு சொந்த மாமியாவார் .இதே பள்ளியில் தான் சினிமா பிரபலங்கள் போன்ற மேட்டுக்குடி சிறுவர்கள் படிக்கிறார்கள் இவர்கள் அதிமுகவை ஆதரித்தது இதுபோன்ற மேட்டுக்குடி லாபநோக்கு கல்வி வியாபரத்தை காப்பதற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Viru News
சென்னை
தனியார் பள்ளி ஒன்றின் நீச்சல் குளத்தில் மாணவன் மூழ்கி மரணமடைந்தது,
பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் பாடசாலையை முற்றுகையிட்டு
நீதி கேட்டபடி உள்ளனர்.
சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த ரஞ்சன் என்ற மாணவனே, இன்று நீச்சல் பயிற்சி எடுத்த போது நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானான். ரஞ்சன் நீச்சல் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, அவனுடன் 26 மாணவர்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்த ரஞ்சன், தமிழ் திரைப்பட இயக்குநர் மனோகரனின் மகன் என்று தெரியவருகிறது.
தகவல் பரவியதும் மற்றைய மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குப் படையெடுத்து வந்தனர். நூற்றுக்கணக்கானோர் பள்ளியின் வாயிலில் குவிந்து விட்டனர். அவர்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குள் அவர்களை அனுமதிக்க பள்ளிக்கூட வாட்ச்மேன் மறுத்து விட்டதில், பெற்றோர்கள் கொதிப்படைந்தனர்.
“எமது குழந்தைகளும் உள்ளே உள்ளார்கள். அவர்களை பார்க்க வேண்டும்” என்று சில பெற்றோர்கள் கோபத்துடன் கூறியபோதும், யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. “யாரையும் உள்ளே விட வேண்டாம் என்பது நிர்வாகத்தின் உத்தரவு” என வாட்ச்மேன் திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார்.
மேலிடத்தின் அனைத்து மட்டங்களிலும் செல்வாக்குள்ள பள்ளி இது என்பதால், சில பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டிருந்தனர். மேலிட செல்வாக்குக்கு காரணம், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் திருமதி ஒய்.ஜி.பி.-யால் நிறுவப்பட்ட பள்ளி இது என்பதுதான். முதல்வர் ஜெயலலிதாவால் சமச்சீர் கல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவில், திருமதி ஒய்.ஜி.பி.-யும் ஒரு உறுப்பினராக இடம் பெற்றிருந்தார்.
இருப்பினும் சில பெற்றோர்கள் எந்த செல்வாக்கு பற்றியும் கவலைப்படாமல், வாட்ச்மேனை வற்புறுத்தியபடி இருந்தனர். ஓரிருவர், பள்ளி அலுவலகத்தை செல்போனில் அழைத்து, தம்மை உள்ளே அனுமதிக்குமாறு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில், பெற்றோருடன் பள்ளி அலுவலகத்தில் இருந்து பேசியவர்கள் இணைப்புகளை துண்டித்துக் கொண்டனர். அதன்பின், பள்ளி அலுவலகத்தின் எந்த போன் லைனையும் யாரும் எடுக்காத நிலை ஏற்பட்டது.
பள்ளிக்கூடத்திற்கு தற்போது போலீஸார் விரைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக