போலீஸ் வேலைக்குத்
தேர்வாகி, பயிற்சியில் இருந்த இருவரை, அவர்களின் மேலதிகாரி,
கட்டாயப்படுத்தி, மற்றவர்களின் சிறுநீரை குடிக்க வைத்தது, பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.மேகாலயா தலைநகர், ஷில்லாங் அருகே மேற்கு கரோ மலை மாவட்டத்தில், மாநில காவல் துறையின் பயிற்சி மையம் உள்ளது.
போலீஸ்
வேலைக்குத் தேர்வான, சியாங்ஷாய் மற்றும் லைட்டன் என்ற இருவரும், மற்ற
பலரும் இங்கு பயிற்சி பெற்று வந்தனர். கடந்த 5ம் தேதி, பயிற்சி மையத்தில்
உள்ள உணவகத்திற்கு இவர்கள் சாப்பிடச் சென்ற போது, சகபயிற்சியாளர்கள்
சிலருடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.இது பற்றி உணவக மேலாளர்,
அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரி போராவிற்கு புகார் அளித்தார்.
இந்நிலையில், அன்று மாலையில், பயிற்சி பெறும் போலீசாரின் அணிவகுப்பு நடந்த
போது, சியாங்ஷாய் மற்றும் லைட்டனை அழைத்த போரா, அவர்களுடன் பயிற்சி பெறும்
மூன்று பேரின் சிறுநீரைப் பிடித்து, அவற்றை குடிக்கும்படி
கட்டாயப்படுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து, சியாங்ஷாயும், லைட்டனும் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் மேலதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆரம்ப கட்ட விசாரணையில், "சம்பவம் நடந்தது உண்மையே' என, தெரிய வந்தது. பயிற்சியாளர் போரா, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக